உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என்னையும் கூப்பிடுறாங்க; சொல்கிறார் ராபர்ட் வாத்ரா

என்னையும் கூப்பிடுறாங்க; சொல்கிறார் ராபர்ட் வாத்ரா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''இதுவரை நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் உழைத்த பிரியங்கா, தற்போது தேர்தலில் போட்டி என்ற அவருக்காக முடிவு எடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது,'' என அவரது கணவர் ராபர்ட் வாத்ரா கூறியுள்ளார்.ராகுல் ராஜினாமா செய்ததால் காலியான கேரள மாநிலம் வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் அவரது சகோதரி பிரியங்கா போட்டியிடுகிறார். இதற்காக அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.இது தொடர்பாக அவரது கணவர் ராபர்ட் வாத்ரா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பிரியங்கா அவருக்காக முடிவு எடுத்துள்ளார். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. 35 ஆண்டுகளாக அவரை பார்த்து வருகிறேன். அவர் குடும்பத்திற்காகவும், மற்றவர்களுக்காகவும், நாட்டிற்காகவும் உழைத்து வருகிறார். அவரைப் பற்றி அவர் எப்போதும் சிந்தித்து கிடையாது. வயநாட்டில் அவரை போட்டியிட வைப்பது என காங்கிரஸ் முடிவு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது அவரது தந்தை ராஜிவ் இருந்தாலும் இதனை பார்த்து பெருமைப்பட்டு இருப்பார்.வெறும் பிரசாரம் மட்டும் செய்யாமல், பார்லிமென்டிற்கு அவர் செல்ல வேண்டும் என எனக்கு விருப்பம் இருந்தது. நான் அரசியலுக்குள் நுழைந்து பார்லிமென்டிற்குள் செல்ல வேண்டும் என மக்கள் விரும்பினால், அப்போது, சரியான முடிவை எடுப்பேன். நான் மொராதாபாத் நகரில் பிறந்தவன். அங்கு போட்டியிட்டு, அவர்களின் பிரதிநிதியாக நான் இருப்பதை அப்பகுதி மக்கள் விரும்புவார்கள். ஆனால், நான் எங்கு சென்றாலும், அரசியலுக்கு வாருங்கள் என என்னிடம் கூறுகின்றனர். எப்போது காங்கிரஸ் விரும்புகிறதோ, குடும்பம் உத்தரவிடுகிறதோ அப்போது எனது தீர்மானம் உறுதியாக இருக்கும். இவ்வாறு வாத்ரா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

J.V. Iyer
அக் 25, 2024 04:44

எல்லா பயங்கரவாதிகளும், தேசவிரோதிகளும் இதற்கு உழைக்க வேண்டும். கேரளா இவர்களின் புகலிடமாக மாறிவிட்டது. அடுத்த ஹிபொல்லா தலைவர் ராபர்ட் வாத்ரா.


ரெட்டை வாலு ரெங்குடு
அக் 24, 2024 20:58

நிலபேர ஊழல் சிபிஐ விசாரணை என்றால் பம்மிட்டு ஓடுற ஆளு இதே மாமியார் வீட்டு சீதனமாக குச்சிஐசு அரசியலில் குதிக்க எம்புட்டு ஆசை இந்த ஆளுக்கு . இந்தக்கூத்து எல்லாம் பாழாப்போன ஊழலில் திளைத்த இந்தியாவில் தான் நடக்கும்.


கிஜன்
அக் 24, 2024 20:36

நீங்கள் கொஞ்சம் விலகி இருப்பது அவருக்கும் நாட்டிற்கும் நல்லது .... ஏன்னா உங்க ஹிஸ்டரி அப்படி ...


Ramesh Sargam
அக் 24, 2024 20:19

அப்படி என்ன உழைத்துவிட்டார் ப்ரியங்கா நாட்டிற்காகவும், மக்களுக்காகவும்? பொய் பேசுவதற்கும் ஒரு எல்லை வேண்டும். ஆமாம், ப்ரியங்காவின் சகோதரர் ராகுல் எல்லை தாண்டியும், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் சென்று பொய் பேசுகிறார்.


M Ramachandran
அக் 24, 2024 20:10

எதற்கும் ஜாக்கிரதை. கம்மிகள் குனிய வைத்து ஆனை ஆட்டம் ஆட போகிறார்கள்.


M Ramachandran
அக் 24, 2024 20:08

ஏன் இஙகு கேராளாவில் அதிகம் கிறித்துவர்கள் இருக்கிறார்களென அதுவும் முதல்வராக பினாயில் ராஜன் ஒரு கிருத்துவராக இருக்க வந்து கும்மி அடிக்கலாமெ. அப்படியெ பினாயில் காலம் முடி அடைய ஆதலால் உஙகளையே அவர் செல்ல பிள்ளையாகா எண்ணி முதல்வர் நாற்காலில் உட்கார வைத்து அழகு பார்ப்பார். அப்புறம் என்ன உங்கள் பாடு ஜாலியோ ஜாலி. கேரளா காடுகள் உங்கள் வசம். இளிச்சவாயன்ங்கள் இருக்கும்வரை நம்ம வீட்டில் மழை தான் போங்கள்.


M Ramachandran
அக் 24, 2024 19:57

ஏமாந்த சோணகிரிகள் மக்கள் இருக்கும்வரை என்ன எல்லாம் சேர்ந்து கும்மி அடியுங்கள். அம்மியில் சாரி மிக்ஸியில் அரைப்பதற்கு பதில் மண்டையின் மேல் மிளகாயய் அரையுங்கள். படித்த சேட்டன்ங்கள் கூடவா யேமாருவாங்க.


R.MURALIKRISHNAN
அக் 24, 2024 19:25

உலகமகா ஜோக்குப்பா, வீட்டை கொள்ளையடிக்கவெல்லாம் யாராவது கூப்பிடுவாங்களா


தாமரை மலர்கிறது
அக் 24, 2024 18:59

ஊழல் திலகம் என்று புகழ்பெற்ற ராபர்ட் வாத்ரா தலைமை ஏற்றால், காங்கிரஸ் கட்சி மீண்டும் செழித்து ஓங்கும்.


ஆரூர் ரங்
அக் 24, 2024 18:44

ராபர்ட் வதேராஜி காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஹரியானாவில் ஏராளமான நிலங்களை வளைத்து போட்டுக் கொண்டிருந்த நீங்க அங்கு பிஜெபி ஆட்சி அமைந்தவுடன் ஏன் சட்டென்று நிறுத்தி விட்டீர்கள்? உங்க பேராசைக்கு தடை வந்துவிட்டதா ? இல்லை நிலங்கள் எதுவுமே விற்பனைக்குக் கிடைக்கவில்லையா??


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 24, 2024 19:01

அப்படி நிலங்களை வளைத்துப் போட்டவரை பாஜக ஆட்சி வந்தவுடன் - தற்போது ஆட்சி அமைந்திருப்பது மூன்றாவது முறை - விசாரித்து உள்ளே தள்ளியிருக்கலாமே ???? எது தடுத்தது ???? அல்லது யார் தடுத்தார்கள் ????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை