உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காதலிக்கு ரூ.3 கோடியில் பங்களா கட்டிய திருடன்

காதலிக்கு ரூ.3 கோடியில் பங்களா கட்டிய திருடன்

பெங்களூரு :பெங்களூரில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட, மஹாராஷ்டிரா மாநில திருடன், தனது கோல்கட்டா காதலிக்கு 3 கோடி ரூபாயில் சொகுசு பங்களா கட்டி கொடுத்துள்ளது தெரியவந்தது.கர்நாடக மாநிலம், பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தா நேற்று அளித்த பேட்டி:பெங்களூரில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய, மஹாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூரை சேர்ந்த பஞ்சாக் ஷரி சாமி, 37, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

181 கிராம் தங்கம்

இவரிடம் இருந்து 181 கிராம் தங்க கட்டிகள், 333 கிராம் வெள்ளி பொருட்கள், தங்கத்தை உருக்க பயன்படுத்தப்படும் கம்பி, ஒரு துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.பஞ்சாக் ஷரி சாமிக்கு மனைவி, ஒரு குழந்தை உள்ளனர். சோலாப்பூரில் 400 சதுர அடி வீட்டில் தான் அவரது தாய், மனைவி, குழந்தை வசிக்கின்றனர். இந்த வீட்டின் மீதான கடனை செலுத்தாததால், வீடு தற்போது ஏலத்திற்கு வந்துள்ளது.கடந்த 2003ல் மைனராக இருந்தபோதே, பஞ்சாக் ஷரி சாமி திருட ஆரம்பித்தார். 2009ல் இருந்து தொழில் முறை திருடனாக மாறினார். பல்வேறு வீடுகளில் திருடிய நகை, வெள்ளி பொருட்களை விற்று கிடைக்கும் பணத்தில் ஆடம்பரமாக வாழ்க்கை நடத்தினார். மஹாராஷ்டிராவை சேர்ந்த ஒரு நடிகைக்கும், இவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.நடிகைக்காக கோடி கணக்கில் செலவழித்துள்ளார். 2016ல் கோல்கட்டாவை சேர்ந்த இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது.

180 வழக்குகள்

காதலிக்காக கோல்கட்டாவில் 3 கோடி ரூபாய்க்கு சொகுசு பங்களா கட்டி கொடுத்துள்ளார். காதலியின் பிறந்த நாளுக்கு 22 லட்சம் ரூபாய்க்கு பரிசும் வாங்கி கொடுத்துள்ளார்.கடந்த 2016ல் திருட்டு வழக்கில் குஜராத் போலீசாரால் கைது செய்யப்பட்டு, ஆறு ஆண்டுகள் சபர்மதி சிறையில் இருந்தவர், 2022ல் வெளியில் வந்து மீண்டும் திருட ஆரம்பித்தார். மஹாராஷ்டிரா, குஜராத், தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இவர் மீது 180 வழக்குகள் உள்ளன.திருடப்படும் தங்க நகைகளை உருக்கி விற்பனை செய்துள்ளார். கராத்தேயில் கருப்பு பெல்ட்டும் வாங்கி உள்ளார். அவரது காதலியிடம் விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

மோகன்
பிப் 06, 2025 00:15

திராவிட திருடன் போல் தெரிகிறது


கோபாலன்
பிப் 05, 2025 17:49

அட போடா! நீயும் உன் தொழிலும்! மூடிய கதவை திறந்து ஓனருக்கு தெரியாமல் பொருளை எடுத்தால் அது திருட்டு. தண்டனை உண்டு. ஓனருக்கு தெரிந்தும் வீட்டையே ஆட்டம் போடுவது திராவிடம். உனக்கு பரிசும் பாராட்டும் கிடைக்கும்.


ஷோபனா.எஸ்
பிப் 05, 2025 13:32

குடும்பத்தினரும் உடந்தையாக இருப்பதால் கைது செய்ய வேண்டும்.


ஆரூர் ரங்
பிப் 05, 2025 12:06

சர்க்காரியா ஆணையத்தில் தர்மாம்பாள் என்ற ராசாத்தி ராஜாஅண்ணாமலைபுரம் பகுதியில் வீட்டை வாங்கின குழப்பமான கதை வெளிவந்தது ஏனோ நினைவுக்கு வருகிறது. இன்னும் அது யாருடைய பணத்தில் வாங்கியது என விளங்கவில்லை.


Barakat Ali
பிப் 05, 2025 11:00

காதலிக்காக கார் பந்தயமே நான் நடத்துறேன்.. அதுவும் அரசு பணத்தில், முந்திரியா இருந்துக்கிட்டு... என்னைவிட இந்த சுரண்டு அப்பாடக்கரா ????


Venkatesan
பிப் 05, 2025 10:54

நான் கூட ஏதோ நம்ம ஊரு அரசியல் வியாதியா இருக்குமோன்னு நெனச்சேன்...


ராமகிருஷ்ணன்
பிப் 05, 2025 09:47

இவன் திமுகவில் இருந்தால் அமைச்சர் ஆகியிருப்பாரு. மெடிக்கல் காலேஜ் கட்டி ஜே ஜே என்று இருந்திருப்பார்.


Nethiadi
பிப் 05, 2025 09:03

...மாடல் பின்பற்றுபவன் போல.


Venkateswaran Rajaram
பிப் 05, 2025 07:15

இவன் திராவிட மாடல்களின் வீடுகளில் மட்டும் திருடினால் பாராட்டப்படுவது வேண்டும்... பொதுமக்களின் வீடுகளில் திருடினால் கொள்ளப்பட வேண்டும்


Thiyagarajan S
பிப் 05, 2025 07:09

எங்க ஊர்ல இதெல்லாம் சர்வ சாதாரணம் கள்ளக்காதலிக்காக 50 கோடிக்கு பங்களா வாங்கி கொடுப்போம் கார் ரேஸ் நடத்துவோம் ஏன்னா இது பெரியார் மண்ணு....


Azar Mufeen
பிப் 05, 2025 12:34

நாங்கல்லாம் மந்திரி மகனா இருந்துகிட்டு விவசாயிகளை கார் ஏற்றி கொல்லுவோம் இதெல்லாம் ஜூஜூபி, திருடன் வடக்கன்ஸ் அத சொல்ல முடியல தமிழ்நாட்டை குறை கூறும் கூட்டம்


முக்கிய வீடியோ