உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இடமாற்றத்தில் ஊழல் இல்லை திம்மாபூர் மறுப்பு

இடமாற்றத்தில் ஊழல் இல்லை திம்மாபூர் மறுப்பு

பெலகாவி: ''கலால் துறை இடமாற்றத்தில், எந்த ஊழலும் நடக்கவில்லை,'' என கலால் துறை அமைச்சர் திம்மாபூர் தெரிவித்தார்.மேல்சபை கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர் நவீன் கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் திம்மாபூர் கூறியதாவது:கலால் துறையில் 2023 டிசம்பர் முதல், 2024 நவம்பர் வரை, குரூப் ஏ, பி, சி., பிரிவில் 336 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை.நடப்பு நிதியாண்டின், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில், மதுபான விற்பனை 6.85 சதவீதம் அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் விற்பனை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதன் பயனாக கலால் துறைக்கு வரி வசூல் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ