உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் இந்த கொடூரன் தான்!

பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் இந்த கொடூரன் தான்!

புதுடில்லி: பஹல்காம் தாக்குதலுக்கு காஷ்மீரை சேர்ந்த ஆதில் அகமது தோகர் தான் மூளையாக செயல்பட்டான் என்று தகவல் வெளியாகி உள்ளது.காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவர் தான் ஆதில் அகமது தோகர். பாகிஸ்தானில் ஆறு ஆண்டுகளாக வசித்த இவன், 2018ல் மூன்று முதல் நான்கு பயங்கரவாதிகளுடன் இந்தியாவுக்கு வந்துள்ளான்.தற்போது பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் காஷ்மீரை சேர்ந்த ஆதில் அகமது தோகர் என்று தெரியவந்துள்ளது. இவன் காஷ்மீரில் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள குர்ரே என்ற சிறிய கிராமத்தை பூர்வீகமாக கொண்டவன்.* 2018ம் ஆண்டு மாணவர் விசா மூலம் இவன் பாகிஸ்தானுக்கு சென்றான். * பாகிஸ்தானில் மாயமான ஆதில் அகமது தோகர் பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்து ஆயுத பயிற்சி மேற்கொண்டான்.* 2024ம் ஆண்டு இவன் இந்தியாவுக்கு ஊடுருவி வந்துள்ளான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Dharmavaan
ஏப் 26, 2025 21:52

புலனாய்வு இவனை ஏன் பிடித்து தண்டிக்கவில்லை


SwathySanthoshPriya Ganesan
ஏப் 26, 2025 20:33

இங்கே உட்கார்ந்து கொண்டு வாய்க்கு வந்தபடி காஷ்மீர் பற்றி அந்த இயற்கை சூழல் பற்றி எந்த புரிதலும் இல்லாமல் பேச வேண்டாம் அங்கே சென்று பார்த்தால் தெரியும் 100 கோடி மக்கள் அங்கு போய் நிறுத்தினாலும் கூட பாதுகாக்க முடியாத ஒரு சூழ்நிலை தான் நாங்கள் இருக்கும் ஒரு லட்சம் ராணுவ வீரர்களால் முடியுமா என்ன அங்கு உள்ள மலைப்பிரதேசம் பணி பிரதேசம் காடுகள் நிறைந்த பிரதேசம் இயற்கை சூழல் எதையுமே சமாளிக்க முடியாத ஒரு சூழல் அதுவும் மாநில அரசு ஒன்று இருக்கும் போது இராணுவம் அதன் இஷ்டப்படி எதுவும் செய்ய முடியாது ஏன் மாநில அரசின் ஒரு போலீஸ் கூட இல்லை அங்கே என்று கேட்க வில்லை எல்லையில் தான் இராணுவம் இருக்கும் அதுவும் ஓரு அடிக்கு ஒரு இராணுவம் நிற்க வைக்க முடியாது


Ramesh Sargam
ஏப் 26, 2025 19:33

மூளை குன்றியவனாக செயல்பட்டிருக்கிறான். நாமும் அவன் மேல், அவன் கூட்டத்தினர் மேல் மூளை குன்றியவர்களாக தாக்குதல் நடத்தி அவர்களை கூண்டோடு ஒழிக்கவேண்டும்.


Sampath Kumar
ஏப் 26, 2025 17:11

இதனை துல்லியமாக கண்டுபிடித்த நமது உளவு துறை இதை முன் கூட்டியே ஏன் தடுக்க வில்லை சரி எவனை பிடிக்க என்ன செய்ய உள்ளார்கள்


Savitha
ஏப் 26, 2025 22:17

உளவு துறை என்ன பிளான் என்று உங்களுக்கு ரிப்போர்ட் அனுப்பி, நீங்க அதை ok செய்த பிறகு தான் அடுத்த ஸ்டெப் எடுப்பாங்க, ஏன்னா நீங்க எவ்ளோ பெரிய ஆளு........ உங்கள் கிட்ட சொல்லாம, நீங்க ok பண்ணாம , அடுத்த நடவடிக்கை பத்தி உங்க கிட்ட புட்டு புட்டு வைக்காம, ஏதாவது செய்ய முடியுமா?


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஏப் 26, 2025 16:04

1. ஆனால் நாங்க கொடுக்கும் ஜிஎஸ்டி வரியை அப்படியே திருப்பி கொடுக்கணும். 2. ராணுவம் போர் புரிவதற்கு. வாட்ச்மென் வேலை செய்ய அல்ல. காஷ்மீர் நிலப்பரப்பு அடர்ந்த காடுகள், மலைகள், உறைபனி, ஆறுகள் நிறைந்த கடுமையான நிலப்பரப்பு. எவ்வளவுதான் பி.எஸ். எஃப். எனப்படும் எல்லைப்பாதுகாப்பு படையினர் ரோந்து வந்தாலும், ஒருசில நிமிட இடைவெளிகளில் எல்லைதாண்டி ஊடுருவ முடியும். குறிப்பாக அங்கு உள்ளூர் மக்கள் போலவே தீவிரவாதிகள் நடமாடுவதால் அடையாளம் காண்பது சிரமம். மேலும் இன்னமும் தீவிரவாதிகளுக்கு ஆதரவும், பாதுகாப்பும் கொடுக்கும் உள்ளூர் மக்கள் அங்கு உள்ளதால் நிலைமை எப்போதுமே சிக்கல்தான். ஒரேஒரு வீரப்பனை பிடிக்க நாம் எத்தனை ஆண்டுகள் முக்கினோம் என்பது இன்னும் நினைவிருக்கும்.


எம். ஆர்
ஏப் 26, 2025 15:26

ஊடுருவி வந்துள்ளான் என தெரிகின்றது அப்போ ராணுவ துறை எந்த லட்சனத்தில் இருக்கிறது என்று இதன் மூலம் தெரிகிறது இதையெல்லாம் ஏன் முன்பே கண்டுபிடிக்க முடியாமல் போனது? இதை கண்டுபிடிக்க 26 அப்பாவி உயிர்கள் தேவையா?? எங்கோ பாதுகாப்பில் பெரிய ஓட்டை உள்ளது என்று மட்டும் தெளிவாக தெரிகிறது அதை எந்தவித சமரசமும் இல்லாமல் அதிக நிதி ஒதுக்கி பலப்படுத்த வேண்டும் தப்பு நடந்ததிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு அடுத்த முறையும் இந்த மாதிரி நடக்காமல் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் நமது ராணுவத்திலிருந்து தகவல் கசிந்தது என்று காலையில் செய்தி வந்தது ராணுவ வீரர்களையும் அவர்களின் நகர்வுகளையும் கண்காணிக்க வேண்டும் ஒன்றிரண்டு ராணுவ வீரர்கள் செய்யும் துரோகத்தால் எல்லோரையும் சந்தேகப்படும்படி ஆகிறது ஆனால் நமது எல்லைச்சாமிகள் பலர் உயிர் தியாகம் செய்வதையும் நாம் மறந்து விடக் கூடாது அவர்கள் இல்லையென்றால் நாம் இங்கு மகிழ்ச்சியாக வாழ முடியாது


Tetra
ஏப் 26, 2025 15:55

போலீஸ்காரன் செய்ய வேண்டிய வேலய ராணுவம் செயாயணுமா? கோணங்கி


V.Mohan
ஏப் 26, 2025 16:19

ஐயா என்ன பேசுகிறீர்கள்? பாதுகாப்பில் ஓட்டை உள்ளதாக கூறுகிறீரே இவ்வளவு வருடங்களாக ராணுவம் இருந்த போது, ராணுவத்தை வைத்து அடக்குமுறை எனக்கூறினார்கள். காஷ்மீரில் எந்த ஒரு இடத்திலும் ராணுவத்தைப் பார்த்து எந்த காஷ்மீரியும் மக்களை விட ராணுவம் தான் கண்ணுக்குத் தெரிகிறது என்று கூறி, சகஜ நிலை வரவில்லை என்றே கூறி வந்தனர். சுற்றுலா பயணிகளை தடை செய்யப்பட்டிருந்த பள்ளத்தாக்குப் புல் வெளிக்கு திடிரென்று முந்தின நாள் 20 ம் தேதி முதல் உள்ளூர் கைடுகள் குதிரைகளில் சுற்றுச்சூழல் கெடாமல் இருக்க என வாகனங்கள் செல்ல தடை உள்ளது தடையை மீறி அழைத்துப் போய் காண்பிக்க ஆரம்பித்துள்ளனர். கல்லெறிவது குண்டு வைப்பது. ஓடும் பஸ்மீது சுடுவது என்று தீவிரவாத செயல் செய்து வந்த பயங்கரவாதிகள், திடீரென்று இம்மாதிரி நிற்க வைத்து நிஜாரை களட்டி மதத்தை செக் செய்து வெட்ட வெளியில் நேராக பாயிண்ட் பிளாங்காக சுட்டு கருணையற்ற பாதகக் கொலை செய்ததை அவர்கள் தவிர வேறு யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். சகஜ நிலை திரும்பக்கூடாது என்பது பக்கத்து நாட்டின் எண்ணம். எங்கேயோ கனடாவில் எவனோ சுட்டதற்கு இந்திய உளவுத்துறைக்கு எதிரிகள் கட்டம் கட்டி களங்கம் கற்பித்தனர். அது மாதிரி நாம் செய்யக்கூடாது. இன்னும் உஷாராக இருக்க வேண்டியது அவசியமே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை