உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாக்., பொருளாதாரத்தையே நிலைகுலையச் செய்து விட்டார் பிரதமர் மோடி; சொல்கிறார் பா.ஜ., எம்.பி.,

பாக்., பொருளாதாரத்தையே நிலைகுலையச் செய்து விட்டார் பிரதமர் மோடி; சொல்கிறார் பா.ஜ., எம்.பி.,

புதுடில்லி: இந்தியா சர்வதேச எல்லையைக் கடந்து தங்களின் எல்லைக்குள் 100 கி.மீ., வரை வந்து தாக்குதல் நடத்தும் என்று பாகிஸ்தான் கனவில் கூட நினைத்து பார்த்தருக்காது என்று பா.ஜ.,எம்.பி., சம்பித் பாத்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது; பாகிஸ்தானுக்குள் நுழைந்து, பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது மிகச் சிறந்த சாதனையாகும். இதுதான் புதிய இந்தியா. அணு ஆயுதம் வைத்துள்ள ஒரு நாட்டை, அதன் சொந்த மண்ணுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறையாகும். இருதரப்புகளிடையே போர் நிறுத்தத்திற்கு எந்த ஒப்பந்தமும் போடவில்லை. மாறாக, பேச்சுவார்த்தையின் பேரிலேயே தாக்குதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதலை முன்னெடுத்தால், நாங்கள் பதிலடி கொடுப்போம். பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு பயத்தை மட்டும் கொடுக்கவில்லை, அந்நாட்டு பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்து விட்டார். சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்ததன் மூலம், பாகிஸ்தான் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இதுவரையில் யாரும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தொட்டு கூட பார்த்ததில்லை. பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் இந்தியாவால் அடையக்கூடிய தூரத்தில் உள்ளது. எங்கள் இலக்குகள் துல்லியமாக இருந்தன. பயங்கரவாதிகள் இருந்த இடங்களை மட்டுமே தாக்கப்பட்டுள்ளது. இந்தியா சர்வதேச எல்லையைக் கடந்து தங்களின் எல்லைக்குள் 100 கி.மீ., வரை வந்து தாக்குதல் நடத்தும் என்று பாகிஸ்தான் கனவில் கூட நினைத்து பார்த்திருக்காது, இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

vbs manian
மே 12, 2025 17:58

நிச்சயம். பாக்கில் பயங்கர உணவு பெட்ரோல் diesal பற்றாக்குறை. எங்கெல்லாம் கடன் வாங்கமுடியுமோ அங்கெல்லாம் வாங்குகிறார்கள். கையில் உள்ள காசை வான வேடிக்கை விடுகிறார்கள். பாக் ராணுவத்தின் சர்வாதிகார போக்கு அழிவு பாதையில் பாக்கை தள்ளுகிறது.


enkeyem
மே 12, 2025 16:45

இந்திய எதிர்ப்பு என்பது என்பது பாகிஸ்தான் முஸ்லிம்களின் இரத்தத்தில் ஊறியது. எவ்வளவு அடி வாங்கினாலும் திருந்தமாட்டார்கள்


RAMAKRISHNAN NATESAN
மே 12, 2025 17:30

பாகிஸ்தான் முஸ்லிம்களின் ? அவர்கள் மட்டுமா ?


m.arunachalam
மே 12, 2025 15:24

நம் குறிக்கோள் தீவிரவாதத்தின் அழிவு மட்டுமே . அண்டைநாடுகளின் வறுமை அல்ல . வறுமை பல தவறுகளை செய்ய வைக்கும் . முக்கியமாக போதை பொருள் கடத்தல் .


Srinivasan Krishnamoorthy
மே 12, 2025 17:14

Breaking their economy is also one of the right strategy that BJP successfully followed, congress and previous governments failed. Pakistans economy falling to low level, world will be finding difficult to retrieve. Same applies to Srilanka and Bangladesh too. Pakistan s economy cannot be retrieved by loans unless they build manufacturing/services and eco tem for exports. Pakistan cannot turn into this positive path without giving terrorism hub


RAMAKRISHNAN NATESAN
மே 12, 2025 17:29

கொஞ்சம் பொது அறிவை வளர்த்துக்கணும் ... ஆயுதம் எடுக்காமத்தான் சீனா வைரஸை உருவாக்கி அனுப்பியது .... எதிர்வரும் காலங்களில் அணுவாயுதப் போரை விட பயோவார், கெமிக்கல் வார்ஃபேர் இவைதான் நடக்கும் ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை