உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இது போதாது, இன்னும் கடுமையான தண்டனை வேண்டும்: மருத்துவர்கள் போராட்டம்

இது போதாது, இன்னும் கடுமையான தண்டனை வேண்டும்: மருத்துவர்கள் போராட்டம்

கோல்கட்டா: பயிற்சி பெண் மருத்துவர் கொல்லப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய்க்கு அளித்த ஆயுள் தண்டனை போதாது, கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஜூனியர் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி அமைந்துள்ளது. தலைநகர் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு முதுநிலை மருத்துவம் படித்த பயிற்சி பெண் டாக்டர், கடந்தாண்டு ஆக., 9ல் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார். மருத்துவ கல்லுாரி கருத்தரங்கு அறையில் நடந்த இந்த சம்பவம், நாடு முழுதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இது தொடர்பாக, போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். மாநில போலீசருக்கு பதிலாக சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கை நடத்தினர்.இந்த நிலையில் இவ்வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. சஞ்சய் ராய்க்கு, கோல்கட்டா நீதிமன்றம் ஆயுள் தண்டனை, அதாவது சாகும் வரை சிறைத்தண்டனை விதித்தது.இறந்த மருத்துவரின் குடும்பத்திற்கு ரூ.17 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது.ஆனால் இந்தத் தீர்ப்பு, பல்வேறு தரப்பிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சீல்டா நீதிமன்றத்திற்கு வெளியே ஜூனியர் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்திருக்க வேண்டும், ஆயுள் தண்டனை விதித்தது தவறானது என்று மருத்துவர்கள் கூறினர்.படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் தாயார் கூறியதாவது:நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம். இது அரிதிலும் அரிதான வழக்கு அல்லவா? பணியில் இருந்த மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். நாங்கள் திகைத்துப் போயுள்ளோம். இந்தக் குற்றத்திற்குப் பின்னால் ஒரு பெரிய சதி இருந்தது என்றார்.படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் தந்தை கூறியதாவது:இந்தக் குற்றம் 'அரிதிலும் அரிதான' பிரிவின் கீழ் வரவில்லை என்று நீதிபதி கூறினார். இது குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்காததை நியாயப்படுத்துகிறது.மற்ற அனைத்து குற்றவாளிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படும் வரை போராட்டத்தைத் தொடருவோம்.ஜூனியர் மருத்துவர்கள் கூறியதாவது:நாங்கள் கடுமையான மற்றும் முன்மாதிரியான தண்டனையை விரும்பினோம், இந்த தண்டனை போதாது. இன்னும் கடுமையான தீர்ப்பைக் கோரி உயர் நீதிமன்றங்களுக்குச் செல்வோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Anu Sekhar
ஜன 30, 2025 22:09

நடு சந்தியில கழுவேற்றவேண்டும்.


m.arunachalam
ஜன 20, 2025 23:24

சமுதாய அக்கறை இல்லாத தீர்ப்பு.


m.arunachalam
ஜன 20, 2025 23:22

சமுதாயத்தை வஞ்சிக்கும் தீர்ப்பு என்பது வெளிப்படை . நீதித்துறைக்கு அரசாங்கம் ஒதுக்கும் பணத்தில் இவனை காவல் காத்து பராமரிக்க சொன்னால் தீர்ப்பு மாற்றி எழுதப்படும் .இனி மக்கள் கொந்தளிப்பு அதிகமாகலாம் .


Sekaran
ஜன 21, 2025 10:54

இந்த தீர்ப்பு வெறும் கண் துடைப்பு வேலையே. இதில் இடுபட்ட ஒரு சில பெரிய புள்ளிகள், பணம் பெரிய அளவில் சிலவழிக்க பட்டு இந்த தீர்ப்பை வாங்கியுள்ளார்கள்.


raja
ஜன 20, 2025 21:26

விசாரணை நீதிமன்றத்தில் குற்றத்திற்கான தீர்ப்பு சற்று அதிக தண்டனையுடன் இருக்க வேண்டும். மேல்முறையீடுகளில் அது தளர்த்தபடும். கொடூர கொலை மற்றும் கற்பழிப்பிற்கு இந்த தண்டனை நீயமான தீர்ப்பு இல்லை.


Karthik
ஜன 20, 2025 20:41

இப்போதெல்லாம் இந்த அ நீதி மன்றங்கள் "நீதி வழங்குவதேயில்லை". மாறாக "பலம்" மான பக்கம் "தீர்ப்பளிக்கிறது". நீங்கள் எவ்வாறு இந்த செய்தியை படித்தீர்கள்..?? நீதி வழங்கப்பட்டது என்றா ?? தீர்ப்பு வழங்கப்பட்டது என்றா?? சிந்திப்பீர்..


Ramesh Sargam
ஜன 20, 2025 20:21

பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை ஒன்றே சரியான தண்டனையாக இருக்கும். மருத்துவர்கள் போராட்டம் சரியானதே.


Krishnamurthy Venkatesan
ஜன 20, 2025 19:49

ஆயுள் தண்டனை கைதிகளை சில வருடங்களுக்கு பின் தம்பி பிறந்த நாள், சித்தப்பா பிறந்த நாள் என்று ஏதாவது காரணம் கூறி ரிலீஸ் செய்துவிடுவார்கள். குற்றத்தின் கடுமையை ஒப்பிடும்போது தண்டனை குறைவுதான். தண்டனை தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும்.


nb
ஜன 20, 2025 19:48

இன்னும் கொஞ்ச நாள்ல டெய்லர் கடையோ மருந்து கடையோ அரசாங்கமே வெச்சு குடுப்பாங்க


Mediagoons
ஜன 20, 2025 19:34

காசு கொடுத்து வழக்கை செட்டில் செய்வது உலகத்தரம் வாய்ந்த தீர்ப்புதான் . போக மாநில அரசுதான் கொடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார். எனவே மோடியும், ஷாவும் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசினால் அவ்ஸர்கள் இந்த ததீர்ப்பை ஏற்றுக்கொள்வார்கள்


கந்தன்
ஜன 20, 2025 19:31

போராட்டம் சரியானது


புதிய வீடியோ