இது ஒருவித நகைச்சுவை; ரொம்ப பழமையானது; ராகுலை சாடிய பாஜ எம்பி கங்கனா ரனாவத்
புதுடில்லி: 'இது ஒருவித நகைச்சுவை. ரொம்ப பழமையானது. அவர்களுக்கு வளர்ச்சியில் எந்த ஆர்வமும் இல்லை' என காங்கிரஸ் எம்பி ராகுலை பாஜ எம்பி கங்கனா ரனாவத் கடுமையாக சாடி உள்ளார். ஓட்டு திருட்டு என்ற பெயரில் லோக் சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு குறித்து, பாஜ எம்பி கங்கனா ரனாவத் கூறியதாவது: இது ஒருவித நகைச்சுவை. ரொம்ப பழமையானது. அவர்களுக்கு வளர்ச்சியில் எந்த ஆர்வமும் இல்லை. அது பீஹாரில் இருந்தாலும் சரி, வேறு எந்தத் தேர்தலிலும் சரி, அவர்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை. நீங்கள் சென்று வழக்குத் தொடரலாம். நீதிமன்றத்திற்குச் சென்று உங்கள் ஆதாரத்தைச் சமர்ப்பிக்கலாம்.மாறாக நீங்கள் இங்கும் அங்கும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தி மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறீர்கள். ஓட்டு திருட்டு பீஹார் மற்றும் உத்தரபிரதேசத்தில் மட்டுமே குற்றம் சாட்டப்படுகிறது, ஆனால் கர்நாடகா, ஹிமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கூறப்படுவதில்லை.இது போன்ற அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம், அவர்கள் அரசியலமைப்பை அவமதிப்பது மட்டுமல்லாமல், மிகவும் தோல்வியுற்றவர்களாகவும் தோன்றுகிறார்கள். அதற்கு மேல் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு கங்கனா ரனாவத் கூறினார்.நம்பிக்கையில்லை
மற்றொரு பாஜ எம்பி அனுராக் தாக்கூர் கூறியதாவது: ராகுலுக்கும், அவரது கட்சிக்கும் இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை. சட்டவிரோத வாக்காளர்களைப் பாதுகாப்பது என்பது காங்கிரசின் கொள்கை. பீஹார் மற்றும் பிற மாநிலங்களில் தேர்தல்களில் தோல்வியடையும் என்ற அச்சம் காரணமாக ராகுல் தவறான கதையை உருவாக்கி வருகிறார். ராகுலின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்திற்கு இந்த விஷயத்தை கொண்டு செல்லலாம். இவ்வாறு அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.