உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி ரயில் நெரிசல் விபத்துக்கு காரணம் இதுதான்; சொல்கிறது டில்லி போலீஸ்

டில்லி ரயில் நெரிசல் விபத்துக்கு காரணம் இதுதான்; சொல்கிறது டில்லி போலீஸ்

புதுடில்லி: டில்லி ரயில் நிலையத்தில் நிகழ்ந்த கூட்ட நெரிசலால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு, 'இரு ரயில்களின் பெயர்கள் ஒரே மாதிரியாக இருந்ததே காரணம்' என்று டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேசம் பிரயாக்ராஜில் நடக்கும் கும்பமேளாவுக்காக டில்லியில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நேற்று இரவு கும்பமேளாவுக்கு செல்வதற்காக டில்லி ரயில் நிலையத்தில் ஏராளமானோர் குவிந்தனர். அப்போது, ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு இந்திய ரயில்வே உத்தரவிட்டுள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ரயில் விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து டில்லி போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். அதாவது, இரு ரயில்களின் பெயர்களும் ஒரே மாதிரியாக இருந்தது தான் விபத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் மற்றும் பிரயாக்ராஜ் ஸ்பெஷல் என இரு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில், பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரயில் ஏற்கனவே நடைமேடை 14ல் நின்று கொண்டிருந்துள்ளது. அப்போது, பிரயாக்ராஜ் ஸ்பெஷல் ரயில் நடைமேடை 16க்கு வருவதாக ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நடைமேடை 14ல் நிற்கும் பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸில் இடம் கிடைக்காத பயணிகள், ஒட்டுமொத்தமாக நடைமேடை 16க்கு முண்டியடித்துக் கொண்டு சென்றுள்ளனர். இதன் காரணமாகவே கூட்டநெரிசல் ஏற்பட்டு உயிர்பலிகள் நிகழ்ந்துள்ளதாக டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் நடைமேடை 12, 13 மற்றும் 15 ஆகியவற்றிற்கு வரவேண்டிய மகத் எக்ஸ்பிரஸ், ஸ்வதந்ரதா சேனானி, புவனேஸ்வர் ராஜதானி ஆகிய ரயில்களும் தாமதமாகியுள்ளன. இதனால், ரயில்நிலையத்தில் கூட்டம் அதிகரித்துள்ளதாக டில்லி போலீசார் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Mediagoons
பிப் 16, 2025 20:51

மத்திய மாநில அரசுகள் ஒழுங்காக திட்டமிடாமல் நடத்தும் மதவாத வியாபாரம்தான் அனைத்துக்கும் காரணம் . மோடியும் யோகியும் தான் இதற்க்கு பொறுப்பேர்க்கவேண்டும்


Jana
பிப் 16, 2025 20:17

அந்த சம்பவம் ஜாமியா மஸ்ஜித் மெட்ரோ. கேட் வேலை செய்ய வில்லை.. யாரும் கோஷம் விடவில்லை


GMM
பிப் 16, 2025 19:30

முன்பு வட இந்திய ரயில் கூட்டமாக ஏறுவதும் டிக்கெட் இல்லாமல் பயணிப்பது உண்டு. அவர்கள் அதிகம் பயன் படுத்துவது ரயில். ரயில் விவரங்கள், பயணம் அத்துபடி . சுய ஒழுக்கமும் உண்டு. ஏராள இட வசதி உள்ள ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகம் இருந்தாலும் இறப்பிற்கு சதி அறிய , கோவை போல் இறந்தவர்கள் விவரம் உதவும். குடிஉரிமை சட்டம் இல்லாமல், குடிமக்களை அறிய முடியாததால், டெல்லி போலீஸ் திணறுகிறது. ?


jayaram
பிப் 16, 2025 18:52

அதிசீ சொல்வார், "இதற்கு தார்மிக பொறுபேற்று பதவி ஏற்க உள்ள பிஜேபி அரசு பொறுபேற்று பதவி விலகி தேர்தலை சந்திக்க வேண்டும் என்பார்.. நமது முதல்வர் ஆமாம் சரி என்பார்.


ஜெய்ஹிந்த்புரம்
பிப் 17, 2025 01:09

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது.. ஹா ஹா


அப்பாவி
பிப் 16, 2025 18:39

அஸ்வினி எம்.பி.ஏ வைக் கேளுங்க சரியா சொல்வாரு.


முருகன்
பிப் 16, 2025 17:06

நடை மோடை 14 16 ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ் இது எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கிறது என நாம் நம்ப வேண்டும்


Ganapathy
பிப் 16, 2025 16:46

ஆனால் காயமடைந்தவர்கள் மற்றும் நேரில் இந்தசம்பவத்தை பார்த்தவர்களின் வாக்குமூலமங்கள் வேறுமாதிரியாக உள்ளன. அவர்கள் அனைவருமே அல்லாஹூ அக்பர் என்ற கோஷத்துடன் ஒரு பெரிய தொப்பி போட்ட முஸ்லிம் கும்பல் தள்ளியதாக கூறுகின்றனர். அதற்கேற்ப நேற்று முதலே ஒரு பெரிய முஸ்லிம் கும்பல் கோஷத்துடன் உற்சாகமாக புது தில்லி ரயில் நிலையத்தின் வாயில் கேட்டுகளை ஏறிக்குதித்து தப்பும் வீடியோக்கள் இணையதளங்களில் வளைய வருகின்றன. இப்படி பொதுவில் பல உண்மைகள் தெரிகையில் போலீஸ் இப்படி புளுக வேண்டிய அவசியம் என்ன?


ஜெய்ஹிந்த்புரம்
பிப் 17, 2025 01:18

மற்ற கோர இரயில் விபத்துக்களின் போதும் இப்படித் தான் சங்கிக்கூட்டம் தனது வக்கிரமான புளுகுகளை அவிழ்த்து விட்டு தனது மதஅரிப்பை தணித்துக் கொண்டது வதந்தியை பரப்பி மதக்கலவரத்தை தூண்டும் உன்னை போன்ற விஷப்புழுக்களை சுட்டுப்பொசுக்க வேண்டும்.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 16, 2025 16:31

ரயில்வே யும் ஒன்றிய பாஜக அரசின் கீழே. டெல்லி போலீசும் ஒன்றிய பாஜக அரசின் கீழே. அதனால் யாரும் கருத்து போட மாட்டார்கள். ஆனால் இது அறிவற்ற அதிகாரிகளின் நிர்வாக அறிவற்ற நிலை


guna
பிப் 16, 2025 18:18

அதனால் நாங்க கள்ள சாராயம் விக்களாம் வைகுண்டம்....நீ தான் ஏஜென்ட் ஓகே வா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை