உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல கால சீசன் தொடங்கியது

சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல கால சீசன் தொடங்கியது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சபரிமலை: கார்த்திகை ஒன்றாம் தேதியான இன்று அதிகாலை 3:00 மணிக்கு புதிய மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோயில் முன்புறம் உள்ள மணியை ஒலிக்க செய்து நடை திறந்ததும் இந்த ஆண்டுக்கான மண்டல கால சீசன் தொடங்கியது .நடை திறந்த பின்னர் தந்திரி கண்டரரு ராஜீவரரு ஸ்ரீ கோயிலுக்குள் வந்து ஐயப்பன் விக்கரகத்தில் அபிஷேகம் நடத்தி மண்டல காலத்தை நெய்யபிஷேகத்தை தொடங்கி வைத்தார்.தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது. கார்த்திகை புலரியில் ஐயப்பனை வணங்க பக்தர்களின் நீண்ட கியூ காணப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wqltm7if&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நடை திறந்த போது சுவாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷம் விண்ணை தொடும் அளவு எழுந்தது. நெய்யபிஷேகம் தொடங்கிய பின்னர் தந்திரி மற்றும் மேல் சாந்திகள் கோயில் முன்புறமுள்ள மண்டபத்தில் கணபதி ஹோமம் நடத்தினர். தொடர்ந்து வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 26 ஆம் தேதி வரை இந்த மண்டல கால பூஜைகள் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ