உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யணும்; மஹா., துணை முதல்வர் கொந்தளிப்பு

கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யணும்; மஹா., துணை முதல்வர் கொந்தளிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: 'பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஆண்மை நீக்கம் செய்யப்பட வேண்டும்,'' என்றார், மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜீத்பவார் தெரிவித்தார்.மஹாராஷ்டிரா, தானே அருகே பத்லபூர் மழலையர் பள்ளி ஒன்றில் 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். இதையறிந்த ஊர் மக்கள், திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்தது. எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தண்டியுங்கள்

மஹாராஷ்டிராவில் பெண்களுக்கான நலத்திட்டம் துவக்கி வைத்து, துணை முதல்வர் அஜீத் பவார் பேசியதாவது: சிவசேனா - பா.ஜ., - தேசியவாத காங்., கூட்டணி அரசு பெண்களுக்கு எதிரான குற்றங்களில், குற்றம் சாட்டப்பட்ட எவரையும் விட்டு வைக்க கூடாது. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

சட்ட நடவடிக்கை

நம்முடைய பெண் பிள்ளைகள் மீது கை வைப்பவர்கள், அதைப் பற்றி இரண்டாவது முறை கூட நினைக்காத வகையில் சட்டம் கடுமையாக இருக்க வேண்டும். என் மொழியில் சொல்வதென்றால், மீண்டும் குற்றம் நடக்காமல் இருக்க, அவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறுவேன். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Ram pollachi
ஆக 25, 2024 16:45

ஊழல் செய்யும் மக்கள் சேவகனுக்கு எதை நீக்கலாம்... அதை கொஞ்சம் சொல்லுங்கள் பார்ப்போம்.


Ram pollachi
ஆக 25, 2024 16:42

கற்பழிப்பு குற்றவாளிக்கு ஆ உ நீக்கிவிட்டு பெண்ணாக மாற்றி சிகப்பு பகுதியில் விட்டுவிடுங்கள்...


Ramesh Sargam
ஆக 25, 2024 12:43

ஒரு நாலு ஐந்து பேருக்கு செஞ்சிட்டு அப்புறம் நீங்க பேசணும்.


சமூக நல விரும்பி
ஆக 25, 2024 10:16

கர்ப்பழிப்பு குற்றவாளிகளுக்கு கருத்தடை ஆப்பரேஷன் செய்து எந்த வேலை வாய்ப்பும் கொடுக்க கூடாது


Kasimani Baskaran
ஆக 25, 2024 09:55

தண்டனை மட்டும் தீர்வாகாது. இனி வரும் சமுதாயத்துக்காவது யோகப்பயிற்சி மற்றும் நற்சிந்தனை, நல்லொழுக்கம் பற்றி பள்ளியில் போதிக்க வேண்டும்.


Palanisamy T
ஆக 25, 2024 09:51

செய்தக் குற்றங்களுக்கு தண்டனை மட்டும் கொடுத்து விட்டால் குற்றங்கள் குறைந்து விடுமா,? இப்படிச் செய்தால் இது என்றும் தொடர்கதைதான் தண்டிக்கும் அதே வேளையில் குற்றங்கள் நடப்பதற்கான காரணங்களை கண்டறிந்து அதைச் சரிச் செய்ய வேண்டும்.


Sampath Kumar
ஆக 25, 2024 09:24

ஆணுக்கு பண்ணி என்ன புண்ணியம் ? பேங்கும் பண்ணுங்க அப்போதான் சரி படும் இல்லாவிட்டால் பிரச்னை அதிகமாகும் புரிஞ்ச சரி


ஜவான்
ஆக 25, 2024 09:23

எல்லோரும்.வச்ய் கிழியப்.பேசுங்க. இதுவரை எத்தனை பேரை தண்டிச்சிருக்கீங்க? அதுவும் எத்தனை வருஷம் கழிச்சு? சட்டமன்றங்களும், நீதி மன்றங்களும் ஒண்ணும் செய்த லாயக்கில்லை.


Kalaiselvan Periasamy
ஆக 25, 2024 08:48

அதோடு இரண்டு கட்டை விரல்களையும் வெட்டி விட வேண்டும் . இல்லையேல் மரண தண்டனை கொடுக்க வேண்டும். மரண தண்டனை அவசியம் இந்த மாதிரி குற்றங்களுக்கு . குற்றவாளிகளுக்கு மனித உரிமை பேசுபவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் . செய்யுமா இந்த உலக நாடுகள் யாவையும் ?


Prasanna Krishnan R
ஆக 25, 2024 08:18

பேசுவது மட்டுமல்ல. தயவுசெய்து செயலில் செய்யுங்கள். சட்டத்தை உடனே நிறைவேற்றுங்கள். மத்திய அரசு கண்டிப்பாக ஒப்புதல் அளிக்கும்.


ديفيد رافائيل
ஆக 25, 2024 08:47

Maharashtra government இந்த சட்டத்தை கொண்டு வந்தா அதை follow பண்ணி மற்ற மாநில அரசுகளும் கொண்டு வருவாங்க. பேசுற இவனே செய்யட்டும் முதல்ல.


முக்கிய வீடியோ