உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசிய கொடியை அவமதித்த மூவர் கைது

தேசிய கொடியை அவமதித்த மூவர் கைது

பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், தடுக்கச்சேரியில், தேசிய கொடியை சிதைத்து, பாலஸ்தீன கொடியுடன் போஸ்டர் தயாரித்து, பொது இடத்தில் காட்சிப்படுத்தி, சமூக வலைதளங்களில் பரப்பியதாக அப்பகுதி பா.ஜ., வினர் போலீசில் புகார் அளித்தனர். கோங்காடு போலீசார் விசாரணையில், தேசிய கொடியை அவமதித்தது அப்பகுதியை சேர்ந்த அத்னான் ஷா, 22, ஹாரீஸ், 27, அக்பர் ஷான் ஆகியோர் என்பது தெரிந்தது. அவர்கள் மூவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை