மேலும் செய்திகள்
ஐஸ்கிரீம் கடையில் தீ விபத்து
01-Jun-2025
புதுடில்லி:ஹரித்வார் நகருக்கு கன்வர் யாத்திரை செல்ல பணம் தேவை என்பதால், கத்தியை காட்டி மிரட்டி, ஐஸ் கிரீம் கடையில் துணிகரமாக கொள்ளையடித்த மூன்று பேர் சிக்கினர்.வட மாநிலங்களில் உள்ள பிரபலமான நீர் நிலைகளில் இருந்து தண்ணீரை எடுத்து சென்று, தங்கள் ஊரின் சிவன் கோவிலில் அபிஷேகம் செய்யும் கன்வர் யாத்திரை அங்கு பிரபலம்.இந்நிலையில், உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் நகருக்கு, டில்லியில் இருந்து கன்வர் யாத்திரை செல்ல, பணம் தேவைப்பட்டதால், 20 வயதான மூன்று பேர், திரி நகரில் இருக்கும் ஐஸ்கிரீம் கடை ஒன்றில் நேற்று முன்தினம் புகுந்தனர்.அந்த கடையின் உரிமையாளர் தர்மேந்தர் என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, கடையில் இருந்த, 43 ஆயிரம் ரூபாய், மொபைல் போன் மற்றும் சில ஐஸ்கிரீம் பார்சல்களை திருடி, பைக்கில் தப்பினர்.புகாரின் படி, அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆராய்ந்த போலீசார், அந்த பகுதியில் உள்ள கேசவபுரம் என்ற இடத்தை சேர்ந்த சுமித், வன்ஸ் குப்தா, சாகர் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில், உத்தராகண்டுக்கு கன்வர் யாத்திரை செல்ல பணம் தேவைப்பட்டதால், ஐஸ்கிரீம் கடையில் கொள்ளையடித்ததாக கூறினர். அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து திருடிய பணம் மற்றும் பொருட்களை கைப்பற்றி, விசாரிக்கின்றனர்.
01-Jun-2025