உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தீ வைப்பு சம்பவம் மணிப்பூரில் மூவர் கைது

தீ வைப்பு சம்பவம் மணிப்பூரில் மூவர் கைது

இம்பால்,வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் பிஷ்ணுப்பூர் மாவட்டத்தில் உள்ள கும்பி பகுதியில், துணை கமிஷனர் அலுவலகம் உள்ளது. இங்கு கடந்த மாதம் 26ம் தேதி மர்ம கும்பல் தீ வைத்தது.இந்த நிலையில் தீ வைப்பு சம்பவம் தொடர்பாக மணிப்பூர் போலீசார் கடந்த 14ல் மூவரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் நான்கு நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தீ வைப்பு சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களை கைது செய்ய, தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் வெளியிடப்பட்ட அறிக்கையில், 'தவ்பால் மாவட்டத்தில் நடந்த தேடுதல் வேட்டையில் ஏ.கே., ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள், கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ