உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வங்கி கொள்ளை தமிழகத்தில் மூவர் கைது

வங்கி கொள்ளை தமிழகத்தில் மூவர் கைது

மங்களூரு: கர்நாடக மாநிலம், மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் அனுபம் அகர்வால் நேற்று அளித்த பேட்டி:தட்சிண கன்னடா, மங்களூரில், கோடேகாரு கூட்டுறவு வங்கியில், முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கடந்த 17ம் தேதி புகுந்தனர். ஊழியர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டி, 12 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை கொள்ளையடித்து தப்பினர்.கொள்ளையர்களை பிடிக்க, பல தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இப்படைகள் வெவ்வேறு மாநிலங்களில் தேடினர். உளவுத்துறை உதவியுடன் விசாரணை நடத்தி, தமிழகத்தின் மதுரை அருகில் முருகன், பிரகாஷ், மணிவண்ணன் ஆகியோர் நேற்று மதியம் கைது செய்யப்பட்டனர்.கைதானவர்கள், முக்கியகுற்றவாளிகள். மற்றவர்களையும் விரைவில் கைது செய்வோம். இவர்களிடம் கார், இரண்டு கோணி பைகளில் இருந்த பணம், அரிவாள், இரண்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மூவரும் தமிழகத்தின், திருநெல்வேலியை சேர்ந்தவர்கள்.மஹாராஷ்டிரா பதிவு எண் கொண்ட காரை பயன்படுத்தி, கொள்ளை அடித்துள்ளனர். சம்பவம் நடந்த பகுதியை சேர்ந்தவர்களின் உதவி இல்லாமல், இந்த கொள்ளையை நடத்தியிருக்க முடியாது. உள்ளூரில் சிலர் உதவி இருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. விசாரணை தொடர்ந்து நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி