உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மக்கள் நலனுக்காக ஜனநாயகத்தின் மூன்று பிரிவுகள்: தலைமை நீதிபதி அறிவுறுத்தல்

மக்கள் நலனுக்காக ஜனநாயகத்தின் மூன்று பிரிவுகள்: தலைமை நீதிபதி அறிவுறுத்தல்

மும்பை: ஜனநாயகத்தின் மூன்று பிரிவுகளும் குடிமக்களின் நலனுக்காகவே உள்ளன என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் தெரிவித்துள்ளார்.மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் வளாகத்தின் திட்ட தொடக்க விழாவில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் பேசியதாவது:நிர்வாகம், நீதித்துறை , சட்டமன்றம் ஆகிய ஜனநாயகத்தின் மூன்று பிரிவுகளும் மக்களின் நலனுக்காகவே உள்ளன, எதுவும் தனிமையில் செயல்பட முடியாது.சுதந்திரம், நீதி மற்றும் சமத்துவத்தின் கொள்கைகள் அரசியலமைப்பில் பொதிந்துள்ளன.நீதித்துறைக்கு வாளின் சக்தியோ அல்லது வார்த்தைகளின் சக்தியோ இல்லை. நிர்வாகக் குழுவில் இல்லாவிட்டால், நீதித்துறை மற்றும் சட்டக் கல்விக்கு போதுமான உள்கட்டமைப்பை வழங்குவது நீதித்துறைக்கு கடினம். ஆகவே மூன்று பிரிவுகளும் அவசியம்.இவ்வாறு கவாய் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

suriyanarayanan
நவ 06, 2025 07:30

ஜனநாயகம் கிடைத்த போது மக்கள் தொகை என்ன அப்போது உள்ள மக்கள் மன நிலை என்ன மக்கள் நிம்மதியாக சூது,வாது, தெரியாது இப்போது உள்ள மக்கள் தொகை என்ன மக்களின் மன நிலை என்ன இப்போது உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப எல்லாம் மாற்ற வேண்டும் நம் வீட்டில் மக்கள் தொகை அதிகம் ஆனால் என்ன செய்வோம் இந்திய அடிப்படை சட்டம் இந்த காலத்தில் ஏற்றது இல்லை


நிக்கோல்தாம்சன்
நவ 06, 2025 05:22

நிர்வாகம் ,சட்டமன்றம் இரண்டும் தனது கடமையை செய்யும்போது மற்றொருத்துறை மட்டும் எப்போப்பார்த்தாலும் லீவு , சுகம் என்று அலைவது வேதனைக்குரியது , இந்த லட்சணத்தில் நீதித்துறையில் வாரிசு அடிப்படையில் . தூ என்று முகம் சுளிக்கவைக்கிறது


Ramesh Sargam
நவ 06, 2025 00:24

ஜனநாயகத்தின் நான்கு தூண்கள் என்ன? ஜனநாயகத்தின் நான்கு தூண்கள்: சட்டமன்றம் நிர்வாகம் நீதித்துறை ஊடகங்கள் இதில் தலைமை நீதிபதி அந்த நான்காவது தூணை பற்றி குறிப்பிடவில்லை. காரணம்: ஊடகங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன, ஏனென்றால் இன்றைய நாட்களில் பெரும்பாலான செய்தி சேனல்கள் ஒரு சார்புடையவை. ஆகையால்தான் தலைமை நீதிபதி அந்த நான்காவது தூணை பற்றி குறிப்பிடவில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை