உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மூன்று தொகுதி இடைத்தேர்தல்: 121 பேர் வேட்புமனு தாக்கல்

மூன்று தொகுதி இடைத்தேர்தல்: 121 பேர் வேட்புமனு தாக்கல்

பெங்களூரு: மூன்று தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட, 121 பேர், வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.ராம்நகரின் சென்னப்பட்டணா, ஹாவேரியின் ஷிகாவி, பல்லாரியின் சண்டூர் தொகுதிகளுக்கு, அடுத்த மாதம் 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் 18ம் தேதி துவங்கியது. நேற்றுடன் முடிவடைந்தது.சென்னப்பட்டணாவில் காங்கிரஸ் வேட்பாளர் யோகேஸ்வர், பா.ஜ., கூட்டணி வேட்பாளர் நிகில் குமாரசாமி உட்பட 62 பேர்; சண்டூரில் காங்கிரஸ் வேட்பாளர் அன்னபூர்ணா துக்காராம், பா.ஜ., வேட்பாளர் பங்காரு ஹனுமந்தா உட்பட 13 பேர்; ஷிகாவியில் காங்கிரஸ் வேட்பாளர் யாசிர் அகமதுகான் பதான், காங்கிரஸ் அதிருப்தி வேட்பாளர்கள் மஞ்சுநாத் குன்னுார், சையது அசிம்பீர் கத்ரி, பா.ஜ.,வின் பரத் பசவராஜ் பொம்மை உட்பட 46 பேர் என 121 பேர், வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.வரும் 28ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வாபஸ் பெற 30ம் தேதி கடைசி நாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை