உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்தது; காஷ்மீரில் வீரர்கள் 3 பேர் உயிரிழப்பு

பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்தது; காஷ்மீரில் வீரர்கள் 3 பேர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயம் அடைந்தனர்.ஜம்மு காஷ்மிரின் உதம்பூர் மாவட்டத்தில் மத்திய போலீஸ் படை ( சி.ஆர்.பி.எப்.,) வீரர்களை ஏற்றிக் கொண்டு ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்தது. திடீரென வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழந்தது. இந்த வாகனம் 187வது பட்டாலியனுக்கு சொந்தமானது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ifkjiryd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த விபத்தில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு மேலும் ஒருவர் உயிரிழந்தார், இதனால் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது.கட்வா பகுதியில் ராணுவ நடவடிக்கையை முடித்து விட்டு திரும்பி கொண்டிருந்த போது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்தில் ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்பாவி
ஆக 07, 2025 18:48

நேரு தான் காரணம். அப்ப வாங்குன ராணுவ வண்டி அல்லது நேரு போட்ட சாலையா இருக்கும்.


vns
ஆக 07, 2025 16:01

மிகவும் துயரம் தரும் செய்தி. வீரர்களுக்கு அஞ்சலி. இந்த விபத்தையும் துல்லியமாக ஆராய்ந்து இதுபோன்ற நிகழ்வுகள் இன்னமும் நடக்காமல் இருக்க அரசும் ராணுவமும் ஆவன செய்யவேண்டும்.


shakti
ஆக 07, 2025 14:58

ஓட்டுநர் பெயர் என்ன ?


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 07, 2025 14:54

வீர தியாகிகளுக்கு அஞ்சலி ......


Ramesh Sargam
ஆக 07, 2025 13:21

கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று செய்தி படித்து மகிழ்ந்தேன். ஆனால் இன்று நம் நாட்டை காக்கும் ராணுவவீரர்கள் விபத்துக்குளாகி இறந்த இந்த செய்தியை படித்து மனம் கலங்கிப்போனேன். அவர்கள் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள். ஓம் சாந்தி.


Apposthalan samlin
ஆக 07, 2025 12:52

பள்ளத்தாக்கில் செல்லும் வாகனம் நல்ல கண்டிஷன் இல் இருக்க வேண்டும்


Mohan
ஆக 07, 2025 15:42

ஒரு வேளை காங்கிரெஸ் பீரியட் ல வாங்கின வேண்டிய இருக்குமோ ...


முக்கிய வீடியோ