உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மரத்தில் கார் மோதல் மூவர் உயிரிழப்பு

மரத்தில் கார் மோதல் மூவர் உயிரிழப்பு

விஜயபுரா: விஜயபுரா தாலுகாவின் ஹெகடிஹாளா கிராஸ் அருகில் நேற்று மதியம் கார் ஒன்று, அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர வயலில் பாய்ந்து, அங்கிருந்த மரத்தில் மோதியது. இதில் கார் பலத்த சேதம் அடைந்தது.காரில் பயணம் செய்த, உத்னாள் கிராமத்தின் பீரப்பா கோடேகர், 30, ஹனுமந்த கடலிமட்டி, 25, ஜுமனாளா கிராமத்தின் யமனப்பா நாடிகர், 28, ஆகியோர் உயிரிழந்தனர். ஜுமனாளா கிராமத்தின் உமேஷ் பஜந்த்ரி, 27, பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.தகவலறிந்து அங்கு வந்த விஜயபுரா ஊரக போலீசார் விசாரித்தனர். கார் ஓட்டுநரின் அலட்சியம், அதிவேகமே விபத்துக்கு காரணம் என, போலீசார் கூறியுள்ளனர். இது தொடர்பாக, வழக்குப் பதிவாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை