உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் முன்விரோதத்தால் சுட்டுக்கொலை

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் முன்விரோதத்தால் சுட்டுக்கொலை

பாட்னா : பீஹார் மாநிலம், பக்சர் மாவட்டம் அஹியாபூர் கிராமத்தில் நேற்று பிரேந்திர சிங் என்பவர், அவரது உறவினர்களுடன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது இரண்டு கார்களில் வந்த கும்பல், அவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது. இதில் பிரேந்திர சிங், சுனில் சிங் யாதவ், வினோத் சிங் யாதவ் ஆகியோர் உயிரிழந்தனர். இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பூஜன் சிங் யாதவ், மந்து சிங் யாதவ் ஆகிய இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விசாரணையில், பிரேந்திர சிங் யாதவின் குடும்பத்தினருக்கும், மற்றொரு தரப்புக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. சமீபத்தில், இவர்களது வீட்டின் அருகே கல் மற்றும் மணல் இறக்கியது தொடர்பாக, இரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்தே, இந்த படுகொலைகள் நடந்தது தெரியவந்துள்ளது. குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
மே 25, 2025 12:43

இந்தியாவில் கூட துப்பாக்கி சூடு கலாச்சாரம் மிக மிக வேகமாக பரவி வருகிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் ஒன்றாக கூடி செயல்பட்டு உடனடியாக ஒரு முடிவு கட்டவேண்டும். இல்லையென்றால் தினம் தினம் துப்பாக்கி சூடுதான் - அமெரிக்க போல.


சமீபத்திய செய்தி