மேலும் செய்திகள்
பிட்டரின் உயிரை பறித்த கிணற்று மேட்டு துாக்கம்
08-Oct-2025
கிணற்றில் தவறி விழுந்து 2 தொழிலாளி பலி
03-Oct-2025
கொல்லம் : கேரளாவில், குடும்ப பிரச்னை காரணமாக கிணற்றுக்குள் குதித்த பெண்ணை மீட்கச் சென்ற தீயணைப்பு வீரர் உட்பட மூன்று பேர் பலியாகினர். கேரளாவின் கொல்லம் மாவட்டம் நெடுவத்துாரைச் சேர்ந்தவர் அர்ச்சனா. இவர், தன் வீட்டில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக அங்குள்ள, 80 அடி ஆழ கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த மீட்புக்குழுவினர், கிணற்றில் குதித்த அர்ச்சனாவை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு படையை சேர்ந்த சோனி குமார் என்ற வீரர், பாதுகாப்பு கவசங்களுடன் கிணற்றுக்குள் இறங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றின் கைப்பிடி சுவர் இடிந்து விழுந்தது. அப்போது, கைப்பிடியை பிடித்தபடி நின்றிருந்த அர்ச்சனாவின் நண்பர் சிவ கிருஷ்ணன் என்ப வரும் கிணற்றுக்குள் விழுந்தார். அந்த இடிபாடுகள், தீயணைப்பு வீரர் சோனி குமார் மீது விழுந்ததில் அவர் படுகாயம் அடைந்தார். கிணற்றுக்குள் காயங்களுடன் கிடந்த மூவரையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
08-Oct-2025
03-Oct-2025