உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மும்பை பெண் பயணியிடம் மோசமாக நடந்த மூன்று டாக்சி டிரைவர்கள் கைது

மும்பை பெண் பயணியிடம் மோசமாக நடந்த மூன்று டாக்சி டிரைவர்கள் கைது

மூணாறு: மும்பை உதவி பேராசிரியை ஜான்வி, நண்பர்களுடன், 'ஆன்லைன்' டாக்சியில் மூணாறுக்கு அக்., 30ல் சுற்றுலா வந்தார். அந்த டாக்சியை, பழைய மூணாறு பகுதியில் உள்ளூர் டாக்சி டிரைவர்கள் தடுத்து நிறுத்தினர். மூணாறில் ஆன்லைன் டாக்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாக நீதிமன்ற உத்தரவு உள்ளதாகவும் கூறி, உள்ளூர் டாக்சி டிரைவர்கள் ஆன்லைன் டாக்சி டிரைவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அதனால், போலீஸ், சுற்றுலாத்துறை அதிகாரிகளின் உதவியை உதவி பேராசிரியை நாடினார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உள்ளூர் டாக்சி டிரைவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதால், உதவி பேராசிரியை பயணத்தை முடித்துக் கொண்டு மும்பை திரும்பினார். மூணாறில் தனக்கு நேர்ந்த இந்த மோசமான அனுபவத்தை, சமூக வலைதளங்களில் நேற்று முன்தினம் அவர் பகிர்ந்தார். இது நாடு முழுதும் பரவியது. இதையடுத்து, மூணாறு போலீசார் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரித்தனர். சுற்றுலா பயணிக்கு உதவாமல் உள்ளூர் டிரைவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக முதல்கட்ட விசாரணை முடிந்ததையடுத்து, ஏ.எஸ்.ஐ., சாஜிபவுலோஸ், கிரேடு எஸ்.ஐ., ஜார்ஜ்குரியன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதில் தொடர்புடைய டாக்சி டிரைவர்கள் தென்மலை எஸ்டேட் நியூ டிவிஷன் விநாயகன், 44, லாக்காடு பேக்டரி டிவிஷன் விஜயகுமார், 40, தேவிகுளத்தை சேர்ந்த அனீஷ்குமார், 40, ஆகியோரை போலீசார் கைது செய்து, ஜாமினில் விடுவித்தனர் . மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் கணேஷ்குமார் கூறுகையில், ''மூணாறில் பெண் பயணியிடம் மோசமாக நடந்து கொண்ட சம்பவத்தில் ஆறு டிரைவர்களுக்கு தொடர்பு உள்ளது. அவர்களின் ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

கண்ணன்
நவ 05, 2025 11:39

இது நோக்குக் கூலி வகை சார்ந்தது கேரளா கேடு கெட்டுப் போனதற்கு அங்குள்ள கம்யூக்களே அதில் அந்த அரசுக்கும் பங்கு உண்டு


visu
நவ 05, 2025 08:53

இந்தியா அளவில் ஆப் தயாரித்து அரசே நடத்தலாம் அரசுக்கு சிறு தொகை கமிஷன் எடுத்துக்கொண்டு நியாயமான வாடகை நிர்ணையிக்கலாம் எல்லோர்ருக்கும் பலன் அளிக்கும் இதில் இணையாமல் டாக்ஸி சேவை லீக்கை முடியாது என்று ஆட்டம் போடலாம் இது வாகனங்களில் செல்வோர் பாதுகாப்பு வாகனங்களின் சான்றிதழ் ஓட்டுனரின் நிலை அனைத்தும் உறுதிசெயும் குற்றங்கள் குறையும்


V RAMASWAMY
நவ 05, 2025 08:53

Any appointment of personnel involved in public service should be done only through police authentication/ verification so that in the event of any criminal involvement, it will be easy to check.


CHELLAKRISHNAN S
நவ 05, 2025 08:24

now a days, Uber / rapido autos they compelled to make extra amount otherwise, they behave rudely. two days before, I booked an auto n the meter showed rs. 139 but he demanded rs. 200. when I resisted, he behaved badly finally, I had no choice but to pay. on my return while booking time itself he told me, if I pay rs 200only, I can board the auto.


Gokul Krishnan
நவ 05, 2025 07:35

மும்பையில் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உபேர் ஓட்டுநர்கள் அடாவடி அக்கிரமத்தை பற்றி செய்தி வராது பிற மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளிடம் மிக அதிக கட்டணம் மற்றும் துப்பி கொண்டே வாகனம் இயக்குவது


Keshavan.J
நவ 05, 2025 10:42

நீ அங்கே போயி வீடியோ எடுத்து காம்ப்ளயின் பண்ணு . யார் தடுத்தா. நல்ல சப்பை கட்டு காட்டுரே


Gokul Krishnan
நவ 05, 2025 11:11

கேள்வி கேட்டால் பதில் வராது


Ramesh Sargam
நவ 05, 2025 07:22

போலீசார் கைது செய்து, ஜாமினில் விடுவித்தனர். இதுதான் எனக்கு புரியவில்லை. ஏன் கைது செய்யவேண்டும்? பிறகு ஏன் ஜாமீனில் விடுவிக்கவேண்டும்? நீதிமன்றம் ஜாமீன் கொடுப்பதற்கு மட்டும்தானா? குற்றம் செய்தவர்களை தண்டிக்காதா? ஒருவேளை எப்பொழுதும்போல ஆதாரம் கேட்டிருக்கும். அது கொடுக்கப்படாததால் ஜாமீன் கொடுத்திருப்பார்கள்.


T.Senthilsigamani
நவ 05, 2025 06:10

காவல் நிலையத்தில் இத்தகைய செல்வாக்கு உள்ளதால் டாக்ஸி டிரைவர்கள் செய்யும் அட்டூழியங்கள் ,அத்துமீறல் ,அகம்பாவ அடாவடி செயல்கள் ,வெளியுலகுக்கு தெரியவில்லை .கேரள கம்யூனிஸ்ட் மாடல் அரசு திராவிட மாடல் அரசை விட மோசம் . டாக்ஸி தொழிலாளர் சங்கங்களை உடனே தடை செய்ய வேண்டும் . இந்த தைரியம் தான் இவர்களின் ஆயுதம் . இந்தியாவின் சாபக்கேடு கம்யூனிஸ்ட் கேரள அரசு .


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
நவ 05, 2025 05:05

உண்டியல் நிர்வாகம் கூட பரவாயில்லையே


முக்கிய வீடியோ