உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 3 வகையான வங்கிக் கணக்குகள் இன்று முதல் இயங்காது; ரிசர்வ் வங்கி புத்தாண்டு அதிரடி

3 வகையான வங்கிக் கணக்குகள் இன்று முதல் இயங்காது; ரிசர்வ் வங்கி புத்தாண்டு அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; நாடு முழுவதும் 3 வகையான வங்கிக் கணக்குகள் இன்று முதல் மூடப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாட்டில் வங்கிக்கணக்குகள் இல்லாத குடிமக்கள் வெகு குறைவு. அதே நேரத்தில் அந்த கணக்குகளை நுகர்வோர் சரியாக பயன்படுத்துவது இல்லை என்ற புகார்கள் இருக்கின்றன. இந்நிலையில், பயன்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்குகள் இன்று முதல் மூடப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பயன்படுத்தப்படாத கணக்குகளை 3 வகையாக பிரித்து, மூடுவதாக தெரிவித்துள்ளது. தொடர்ந்து 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாக எந்த பணப்பரிவர்த்தனைகளும் செய்யாத கணக்குகள் மூடப்படுகின்றன. இந்த கணக்குகளே பெரும்பான்மையான சைபர் க்ரைம் குற்றங்களுக்கு பயன்படுத்துவதே இதற்கு காரணம் என ரிசர்வ் வங்கி கூறி உள்ளது. இதுதவிர, 12 மாதங்கள் எவ்வித பரிவர்த்தனைகளும் செய்யப்படாத கணக்குகள் செயலற்ற கணக்குகள் ஆகும். இவையும் முடக்கும்படி கூறி உள்ள ரிசர்வ் வங்கி, அந்த கணக்குகளை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட வங்கிக் கிளையை நேரடியாக அணுகுமாறு கூறி உள்ளது. ஜீரோ பேலன்ஸ் கணக்குகளும் நிறுத்தி வைக்கப் படுகின்றன. எனவே இந்த 3 வகையான வங்கிக் கணக்குகளை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர விரும்பும் வாடிக்கையாளர்கள், தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி கிளையை அணுகி விவரம் அறியலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

அப்பாவி
ஜன 02, 2025 08:08

ஜன் தன் கணக்கு. ஜன் தான் இருக்கு. தன் நையெல்லாம் எப்பவோ உருவிட்டாங்க. மூட வேண்டியதுதான்.


A Nagarajan
ஜன 02, 2025 06:08

நல்ல அரசு இது. இவர்களே எல்லோருக்கும் என வங்கி கணக்கை ஆரம்பித்தார்கள். அதை ஒரு சாதனையாகவும் கூறிக்கொண்டார்கள். இப்போது அதையும் மூட ஆரம்பித்து விட்டார்கள். கோமாளித்தனம்


அப்பாவி
ஜன 02, 2025 05:57

முதலில் அந்த கணக்குகளில் உள்ள பணத்தை அதன் உரிமையாளர்களுக்கு தரவேண்டிய பொறுப்பு இருக்கிறது. இவிங்க கணக்கை முடக்கி அந்தப் பணற்றையும் ஆட்டையப் போடுவாங்க. ஏற்கனவே IEPF ல முதலீடுகளை அனுப்பி திரும்ப பெற முடியாமல் அமுக்கப் பாக்கறாங்க.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 01, 2025 21:14

நாங்க நினைச்சா எல்லோரையும் வங்கிக்கணக்கு துவக்க வைப்போம் .... அதே போல நாங்க நினைச்சா வங்கிக்கணக்குகளை முடிச்சும் வைப்போம் ...


subramanian
ஜன 01, 2025 22:07

தர்மராஜ், நுனிப்புல் மேய்ந்து விட்டு, அரைகுறை பதிவு போட வேண்டாம்


rama adhavan
ஜன 01, 2025 19:03

இந்த நடவடிக்கைகளுக்கு முன் சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குடன் இணைக்கப் பட்டுள்ள மொபைல் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பி ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் அவர் கணக்கை தொடர விரும்பினால் உடன் ஒரு பரிவர்த்தனை செய்ய வேண்டும் என சொல்லலாமே? வங்கிகளுக்கு தானாக கணக்கை முடக்கும் அதிகாரம் ஆபத்தானது.


r ravichandran
ஜன 01, 2025 17:48

நிர்மலா சீதாராமன் வெறும் நிதி அமைச்சர் தான், மறைந்த மன் மோகன் சிங் 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்காமல் பிரதமர் ஆக இருந்தார். அதை எப்படி சொல்வது. அட, அண்ணாதுரை கூட தேர்தலில் நிற்காமல் தான் முதல் அமைச்சர் ஆக இருந்தார். வரலாறு தெரியாமல் வாய் விடக்கூடாது.


தமிழ்வேள்
ஜன 01, 2025 16:19

நூறு சதம் ஆன்லைன் பரிவர்த்தனை என்றால் இப்படிப்பட்டவைகளை தவிர்க்க இயலாது ..முன்பு , வங்கி கிளைகள் , ரெசிடென்ஷியல் பகுதிகளில் காலை 07.30 மணி முதல் 11.00 மணி வரை செயல்பட்டன ..மாலை நேர கிளைகள் மாலை 07.00 வரை செயல்பட்டன ..ஞாயிறு அன்று ஒரு சில கிளைகள் செயல்பட்டன ...வங்கி கவுண்டர்களின் நடவடிக்கை வெகுவாக இருந்தது ..அன்று பெரும்பாலும் வங்கிகளுக்கு நேரடியாக சென்றதால் , ஆளரி அடையாள அட்டை இல்லாமலேயே ஏடாகூடங்கள் இல்லாமல் ஒழுங்காக இருந்தன ....முகம் தெரியாமல் நடவடிக்கை இருக்கும்போது , இந்த மாதிரி வில்லங்கங்களும் நடக்கும் ....வாடிக்கையாளர்களை வங்கி கிளைக்கு வரவைப்பதே நல்லது ....


M.COM.N.K.K.
ஜன 01, 2025 14:35

சில வங்கிகள் ZEERO பேலன்ஸ் வங்கி கணக்கை கொண்டுவந்ததே அது என்னாச்சி இது முழுக்க முழுக்க வங்கிகள்தான் தவறுசெய்தது ZEERO பேலன்ஸ் கணக்கை யார் துவக்க சொன்னது இதையெல்லாம் பார்த்தால் வேடிக்கையாக உள்ளது கேலி கூத்தாகவும் உள்ளது .


bmk1040
ஜன 01, 2025 13:48

உண்மையான காரணம் என்ன தெரியுமா? 2024 இன் 9 மாதங்களில் மட்டும் 12500 கோடி சைபர் crime மூலம் இந்த அறிவு கெட்ட மக்கள் பணம் கொள்ளை அடிக்க பட்டு இருக்கிறது . எல்லாம் இந்த மாதிரி அக்கௌன்ட் மூலமா தான் . இப்ப முழிச்சிக்கிட்டாங்க ..


Kanns
ஜன 01, 2025 12:35

Dangerous


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை