உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மகளை சீரழித்த கொடூர தந்தைக்கு மூன்று ஆயுள்

மகளை சீரழித்த கொடூர தந்தைக்கு மூன்று ஆயுள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மூணாறு: கேரளாவில், 8 வயது மகளை மூன்று ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.கேரளாவின் இடுக்கி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 35 வயதுடைய நபர், தன் 5 வயது மகள் ஒன்றாம் வகுப்பு படித்தது முதல், தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். கடந்த 2020ல் சிறுமிக்கு 8 வயது ஆன போது தந்தையின் கொடூர செயல் வெளியில் தெரியவந்தது. இடுக்கி போலீசில் தாயார் புகார் அளித்தார். போலீசார் தந்தையை 'போக்சோ' வில் கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை இடுக்கி பைனாவ் அதிவிரைவு போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. கொடூர தந்தைக்கு மூன்று ஆயுள் தண்டனையும், 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Natchimuthu Chithiraisamy
ஜூலை 19, 2025 19:27

பிஞ்சு குழந்தை என்று நீதிபதிக்கு தெரியவில்லை 3 ஆண்டுகள் என்பது சரியான தீர்ப்பு இல்லை பின்னாளில் அந்த பெண்ணுக்கு பாதிப்பது வரலாம் எனவே விடுதலைக்கு பின் கண்டிப்பாக பல காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து இடுவது அந்த விடுதலை குற்றவாளியை கண்காணிக்க முடியும் அதை நீதிபதி ஆய்வு செய்வாரா


shyamnats
ஜூலை 19, 2025 09:21

பயிர்களுக்கு நடுவே வளர்ந்த களைகளை பிடுங்குவது போல் இவர்களுக்கு உச்ச பட்ச தண்டனை கொடுப்பதுதான் சரி. சிறை தண்டனை என்பது அறியாமல் தவறு செய்தால் திருந்துவதர்காக இருக்க வேண்டும், இவர் போன்றவர்காக அல்ல. மக்கள் வரிப்பணம் வீணாகிறது.


புதிய வீடியோ