உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தக் லைப் Vs கன்னட மொழி: கர்நாடகா ஐகோர்ட் படியேறிய கமல்

தக் லைப் Vs கன்னட மொழி: கர்நாடகா ஐகோர்ட் படியேறிய கமல்

பெங்களூரு: தக் லைப் பட விவகாரம் தொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டில் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது.பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள தக் லைப் படம் ஜூன் 5ம் தேதி ரிலீசாகிறது. கமல்ஹாசன், சிம்பு, ஜோஜூ ஜார்ஜ், த்ரிஷா நடிப்பில், மணிரத்னத்தின் இயக்கத்தில் இந்த படம் உருவாகி உள்ளது.படம் தொடர்பான பிரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என்றார். அவரின் இந்த தமிழ், கன்னடம் ஒப்பீடு கர்நாடகாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கன்னட மொழியை சிறுமைப்படுத்தி விட்டதாகவும், அதன் வரலாறு தெரியாமல் கமல் பேசியிருக்கிறார் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. கன்னட அமைப்புகள் போராட்டத்தில் குதிக்க, கர்நாடகாவில் தக் லைப் படம் ரிலீஸ் ஆகாது என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சம்மேளனம் அறிவித்துள்ளது.இந்நிலையில், கர்நாடகாவில் தக் லைப் படத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என்ற அடிப்படையில் சட்டப்பூர்வ தலையீடு கோரி கர்நாடக ஐகோர்ட்டை கமல்ஹாசன் நாடி உள்ளார். தமது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ரிட் மனு ஒன்றை அவர் தாக்கல் செய்துள்ளார்.கர்நாடக அரசு, போலீஸ் மற்றும் திரைப்பட வர்த்தக அமைப்புகள் தமது படம் வெளியிடுவதை தடுக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று மனுவில் அவர் கோரியுள்ளார். மேலும், திரையீட்டின் போது போதிய பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

மீனவ நண்பன்
ஜூன் 02, 2025 21:26

குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் ..பழைய தமிழ் திரைப்பட பாடல் ..யாரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை


vbs manian
ஜூன் 02, 2025 21:20

தமிழ் தன் உயிர் என்று பேசுபவர் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் ஏன் பெயர் வைக்க வேண்டும்.


vbs manian
ஜூன் 02, 2025 21:19

சரி படத்தை பார்க்க யாரும் வரவில்லை என்றால் என்ன செய்ய முடியும்.


உண்மை கசக்கும்
ஜூன் 02, 2025 20:06

முன்பு நடந்தது போல், நான் நாட்டை விட்டே போகிறேன் என்பார்


Balamurugan
ஜூன் 02, 2025 18:39

மனசுக்குள்ள பெரிய மேதாவின்னு நெனப்பு. வாயை மூடிக்கிட்டு இருக்கணும். திமுகாவிலே இணைத்து இவன் MP ஆன நேரம் சூப்பரா இருக்கு. படம் எப்படியும் ஊத்திக்க தான் போவுது.


Sundar R
ஜூன் 02, 2025 18:05

இச்செயல் மூலம் கமல்ஹாசன் தன்னுடைய கோவணத்தை கழற்றி தலையில் மேல் கட்டு கட்டியுள்ளார்.


மீனவ நண்பன்
ஜூன் 02, 2025 21:23

எங்கோ மணம் வீசுதே ..என்று சொல்லுவார்


மூர்க்கன்
ஜூன் 02, 2025 21:51

இதன் மூலம் அயோத்தி தீர்ப்பு மாதிரி நீதி மன்றங்கள் கோவணத்தை உருவும் திருட்டு வேலையை செய்கின்றது என்று ஒப்பு கொள்கிறீர்கள். மட்டுமல்லாமல் கோவணத்தை அவிழ்ப்பதும் கமலுக்கு ஒன்றும் புதிதும் அல்ல.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை