உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாற்றத்திற்கான நேரம்!

மாற்றத்திற்கான நேரம்!

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, 10 ஆண்டுகாலப் பிரச்னையை எழுப்புவதற்கு பதிலாக, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான மாநில வளர்ச்சியைப் பற்றி பேச வேண்டும். அசாமை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் நேர்மறையான அரசியலை இளம் தலைமுறையினர் ஆதரிக்க வேண்டும். ஒரு மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது. -பிரியங்கா, பொதுச்செயலர், காங்.,

மறுபரிசீலனை தேவை!

இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம், நம் நாட்டின் ஆப்பிள் விவசாயிகளை பாதிக்கும். எனவே, இந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதுடன், ஜம்மு - காஷ்மீரின் தோட்டக்கலைத் தொழிலை பாதுகாக்க வெளிநாட்டு ஆப்பிள்களுக்கு 50 சதவீத இறக்குமதி வரியை அமல்படுத்த வேண்டும். - மெகபூபா முப்தி, தலைவர், மக்கள் ஜனநாயக கட்சி

எந்த தொடர்பும் இல்லை!

முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், எங்கள் கட்சியில் அங்கம் வகிக்கவில்லை; அவருக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவரைப் போன்ற வாடகை குரல்களுக்கு எங்கள் கட்சியில் இடமில்லை. அவர்களின் கருத்தை மதிக்க வேண்டிய அவசியமில்லை. - ரமேஷ் சென்னிதலா மூத்தத் தலைவர், காங்கிரஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை