மேலும் செய்திகள்
8 நகரங்களில் வெயில் சதம்!
19-Sep-2024
சென்னை: தமிழகத்தில் இன்று 8 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் மக்களை வாட்டி எடுத்தது. வெயில் நேரங்களில் வெளியில் வருவதை மக்கள் தவிர்ப்பது சிறந்தது என்று மருத்துவர்களும் அறிவுறுத்தி இருந்தனர்.இந்நிலையில் இன்றும் வெயில் கடுமையாக சுட்டெரித்தது. தமிழகத்தில் 8 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்தது. அதிகபட்சமாக மதுரை விமான நிலைய பகுதியில் 105 டிகிரி பாரன்ஹீட் பதிவானது.மற்ற பகுதியில் பதிவான வெப்பம் வருமாறு; மதுரை நகர்- 104 டிகிரி பாரன்ஹீட் கரூர் பரமத்தி, நாகை - 102 டிகிரி பாரன்ஹீட் ஈரோடு, தூத்துக்குடி, திருச்சி - 101 டிகிரி பாரன்ஹீட் தஞ்சை - 100 டிகிரி பாரன்ஹீட்
19-Sep-2024