தெலுங்கானாவில் நாளை பந்த்
ஐதராபாத் : தெலுங்கானா மாநிலம் அமையக்கோரி, தலைநகர் டில்லியில் மண்டாடி யெட்டி என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். யெட்டியின் உடலை ஆந்திரபவனில் வைக்க அனுமதி கோரப்பட்டது. ஆனால் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனைக் கண்டித்து தெலுங்கானா பகுதியில் நாளை பந்த் நடத்த தெலுங்கானா அமைப்புக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.