வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்த மலையை உன்கல் மலை என்றும் கூறுவார்கள். இந்த மலை உச்சியில் முருகன் கோயில் உள்ளது.
கர்நாடகாவின் ஹூப்பள்ளி - தார்வாட் இரட்டை நகரங்கள் மிகவும் அழகானவை. இங்கு ஏராளமான சுற்றுலா தலங்கள், கோட்டை, புராதன கோவில்கள் நீர் வீழ்ச்சிகள் இருந்தாலும் சுற்றுலா பயணியர் அவ்வளவாக வருவதில்லை. இதற்கு, முறையான தகவல்கள் இல்லாததே காரணம்.நகர் முழுவதும், சிறப்பாக நிர்வகிக்கப்படும் பூங்காக்கள், ஏரிகள் உள்ளன. எப்போதும் ஒரே இடத்துக்கு செல்வதற்கு பதில், மாறுதலுக்கு ஹூப்பள்ளி - தார்வாடுக்கு வாருங்களேன். உங்களை வரவேற்க, சுற்றுலா தலங்கள் காத்திருக்கின்றன. நிருபதுங்கா மலை
ஹூப்பள்ளி நகரில் உள்ள நிருபதுங்கா மலை, மிகவும் அற்புதமானது. இயற்கை அழகு கொட்டி கிடக்கிறது. பலவிதமான பறவைகளை இங்கு காணலாம். டிரெக்கிங் பிரியர்களுக்கு தகுந்த இடம். மலையேறுவது உங்களுக்கு கஷ்டமாக தோன்றினால், வாகனங்களிலும் செல்லலாம்.நிருபதுங்கா மலை உச்சியில் நின்று பார்த்தால், ஹூப்பள்ளி நகரின் முழுமையான அழகை ரசிக்கலாம். ஹூப்பள்ளி - தார்வாடில் உள்ள உயரமான மலை இதுதான். மலை உச்சியில் அம்மன் கோவில் அமைந்துள்ளது. சாலை நன்றாக இருப்பதால், தினமும் பலர் நடை பயிற்சி செய்கின்றனர்.மலையின் நிசப்தமான சூழ்நிலை, மனதுக்கு பரவசத்தை அளிக்கும். உங்களை புது உலகத்துக்கு அழைத்து செல்லும். இங்கு வீசும் தென்றல் காற்றை அனுபவிக்க, அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். நிருபதுங்கா மலைக்கு சென்றால் மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி ஏற்படும் என்பதில் சந்தேகமே இல்லை. மலையில் விற்கப்படும் ருசியான தின்பண்டங்களை சுவைக்க மறக்காதீர்கள்.மலையின் படிகளில் இருந்து, 1 கி.மீ., தொலைவில் புதிதாக நுழைவு வாயில் கட்டப்பட்டுள்ளது. இங்கு சுற்றுலா பயணியர் டிக்கெட் வாங்கி, மலையில் ஏறலாம். நுழைவு வாயிலில் வாகனங்களை நிறுத்தலாம். ஒருவருக்கு தலா 10 ரூபாய், 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஐந்து ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். நடக்க முடியாத மூத்த குடிமக்களுக்கு மிகவும் குறைந்த கட்டணத்தில், வாகன வசதி செய்யப்படுகிறது.மலையில் இஸ்கானின் சுத்தமான சைவ ரெஸ்டாரன்ட் அமைக்கப்பட்டுள்ளது. பிரைட் ரைஸ், நுாடுல்ஸ், ஐஸ்கிரீம், பஜ்ஜி உட்பட பலவிதமான சிற்றுண்டிகள் கிடைக்கின்றன.குழந்தைகளுக்கான பூங்காவில் அவர்கள் விரும்பும் அனைத்து விளையாட்டு சாதனங்களும் உள்ளன. இப்பூங்கா 1974ல் அமைக்கப்பட்டதாகும். சூரிய அஸ்தமன நேரத்தில் இங்கு சென்றால், அற்புதமான காட்சியை காணலாம். நிருபதுங்கா மலைக்கு செல்ல குளிர் காலம், கோடை காலம் ஏற்றதாகும். திங்கள் முதல் ஞாயிறு வரை 9:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரையிலும், மதியம் 2:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை மலைக்கு செல்ல அனுமதி உள்ளது. உனகல் ஏரி
ஹூப்பள்ளியின், பிரபலமான ஏரிகளில் உனகல் ஏரியும் ஒன்றாகும். இது மிக சிறந்த சுற்றுலா தலமாகும். தொடர் மழை பெய்ததால் ஏரியில் மடை திறந்து, வெள்ளம் பாய்ந்தோடும் காட்சி சுற்றுலா பயணியரை பரவசம் கொள்ள செய்யும்.உனகல்லில் இருந்து, சூரிய அஸ்தமனத்தை பார்க்க, சுற்றுலா பயணியர் கூட்டம், கூட்டமாக வருகின்றனர். குடும்பத்துடன் வார இறுதியை கொண்டாட விரும்பினால், உனகல் ஏரிக்கு வரலாம். இந்த ஏரி, 200 ஏக்கரில் உள்ளது. பசுமை சூழ்ந்த பகுதியில் ஏரி அமைந்துள்ளது. இயற்கை பிரியர்களின் சொர்க்கமாகும். கிளாஸ் ஹவுஸ்
ஹூப்பள்ளி நகரின் முக்கியமான சுற்றுலா இடம் இந்திராகாந்தி கிளாஸ் ஹவுஸ் கார்டன். போட்டோ ஷூட் நடத்த, புகைப்பட கலைஞர்களுக்கு தகுதியான இடம். பூங்காவில் அழகான கண்ணாடி மாளிகை உள்ளது. இங்கு குழந்தைகளுக்கான ரயில் உள்ளது. இது ஹூப்பள்ளி - தார்வாடின் 'நம்பர் ஒன்' பூங்காவாகும்.ஹூப்பள்ளி நகரில் இருந்து, கூப்பிடு தொலைவில் உள்ளது. ஹூப்பள்ளிக்கு வரும் சுற்றுலா பயணியர் இந்த கார்டனை பார்க்க மறக்காதீர்கள். - நமது நிருபர் -
இந்த மலையை உன்கல் மலை என்றும் கூறுவார்கள். இந்த மலை உச்சியில் முருகன் கோயில் உள்ளது.