உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மூணாறில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்; அறைகள் கிடைக்காமல் திண்டாட்டம்

மூணாறில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்; அறைகள் கிடைக்காமல் திண்டாட்டம்

மூணாறு : கேரள மாநிலம் மூணாறில் தொடர் விடுமுறையால் குவிந்த சுற்றுலாப்பயணிகள் போதிய அறைகள் கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகினர்.மூணாறில் கோடை சுற்றுலா சீசன் துவங்கியும் கேரளா தவிர தமிழகம் உட்பட பிற மாநிலங்களில் பள்ளி, கல்லுாரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்காததால் பயணிகள் வருகை குறைவாக இருந்தது. இந்நிலையில் வார விடுமுறை, இன்று (ஏப்.14) தமிழ் புத்தாண்டு, கேரளாவில் விஷூ பண்டிகை ஆகியவற்றை முன்னிட்டு தொடர் விடுமுறையை கொண்டாட மூணாறில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். ராஜமலை, மாட்டுபட்டி, எக்கோ பாய்ன்ட், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலாப் பகுதிகள் களை கட்டின.நெரிசல்:பயணிகள் வருகை அதிகரிப்பால் மூணாறு நகர் உள்ளிட்ட அனைத்து சுற்றுலாப் பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஊர்ந்து சென்றன. அதனால் சுற்றுலாப்பயணிகள் திட்டமிட்டபடி பயணத்தை தொடர இயலவில்லை.திண்டாட்டம்:ஏப்.,12 முதல் இன்று (ஏப்.,14) வரை தங்கும் விடுதிகளில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டதால் முன்பதிவு செய்யாமல் வந்த பயணிகள் அறைகள் கிடைக்காமல் திண்டாடினர்.அதிகரிப்பு:மூணாறில் நட்சத்திர அந்தஸ்து கொண்ட தங்கும் விடுதிகள் தவிர பிற தங்கும் விடுதிகளில் அறைகளின் கட்டணம் சீசனை பொறுத்து வசூலிக்கப்படுகிறது. தற்போது பயணிகள் வருகை அதிகரித்ததால் அறைகளின் கட்டணமும் பல மடங்கு அதிகரித்தது. அதனால் 'பட்ஜெட்' போட்டு, சுற்றுலா வந்த பயணிகள் சுற்றுலாவை பாதியில் முடித்து விட்டு ஏமாற்றத்துடன் சொந்த ஊர் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ram Moorthy
ஏப் 14, 2025 04:18

மிகவும் அழகான இடம் மூணாறு இயற்கை காட்சி அழகான பள்ளத்தாக்குகள் தண்ணீருக்கு குறைவில்லாத இடம் தான் மூணாறு சென்ற வருடம் குடும்பத்தோடு சென்று வந்தோம் மிகவும் மகிழ்ச்சியான நேரம் அது.


வாய்மையே வெல்லும்
ஏப் 14, 2025 04:11

பேசாம எல்லாரும் கோடை விடுமுறை சென்னை மரினாவிற்கு வாருங்கள். மாங்காய் பத்தை சுண்டல் செலவு மட்டும் . கடல் காற்று அள்ளிவீசுது . குறைந்த செலவில் நிறைந்த கொண்டாட்டத்துக்கு ஒரே இடம் .. மரீனா பீச். பொழுது போகவேண்டும் என்றால் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள தலீவர் கல்லறைக்கு விசிட் அடிக்கலாம் . பூந்தி போட்ட தயிர் வடை மற்றும் முரசொலி நாளிதழ் இலவசம். மாடல் ஆட்சியின் அவலங்களை பேச வேணாம் . உங்களை அள்ளிக்கிட்டு போய்டுவானுங்க .. ஜாக்கிரதை ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை