உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விஷவாயு பாதிப்புக்கு காரணமான போபால் ஆலை நச்சுக்கழிவு; 40 ஆண்டுக்குப் பிறகு அகற்றம்

விஷவாயு பாதிப்புக்கு காரணமான போபால் ஆலை நச்சுக்கழிவு; 40 ஆண்டுக்குப் பிறகு அகற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்து பிதாம்பூர் என்ற இடத்திற்கு பலத்த பாதுகாப்புடன் 12 கண்டெய்னர் லாரிகளில் சுமார் 337 மெட்ரிக் டன் நச்சுக் கழிவுகள் ஏற்றப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது.மத்திய பிரதேசத்தின் போபாலில் அமைந்துள்ள, 'யூனியன் கார்பைட்' பூச்சிக்கொல்லி மருந்து தொழிற்சாலையில், 1984 டிச., 23ல், விஷயவாயு கசிவு ஏற்பட்டது. மிகவும் கோரமான இந்த சம்பவத்தில், 5,479 பேர் உயிரிழந்தனர். இதைத் தவிர, உடல் உறுப்புகளை இழந்து நிரந்தர சுகாதார பிரச்னைகளால், ஐந்து லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மூடப்பட்டுள்ள இந்த ஆலையில் உள்ள, 3 லட்சத்து 77,000 கிலோ கழிவுகளை அகற்றுவது தொடர்பான பிரச்னை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இது தொடர்பாக விசாரித்த மத்திய பிரதேச உயர் நீதிமன்றம், மாநில அரசு சரியான நடவடிக்கை எடுக்காததற்கு கண்டனம் தெரிவித்தது. உடனடியாக அந்த கழிவுகளை அகற்றி, அவற்றை அழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடப்பட்டது.இதைத் தொடர்ந்து, போபாலில் இருந்து 250 கி.மீ., தொலைவில், இந்துாருக்கு அருகே உள்ள பீதாம்புரில் உள்ள கழிவுகளை மறுசுழற்சி செய்யும் மையத்தில், இந்தக் கழிவுகளை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கழிவுகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்காக, பல பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய 12 டிரக்குகள், போபால் ஆலைக்கு வந்தன. முழு கவச உடை அணிந்த போபால் மாநகராட்சி, சுற்றுச்சூழல் அமைப்பு உள்ளிட்டவற்றின் அதிகாரிகள் முன்னிலையில், கழிவுகளை அகற்றும் பணி துவங்கியது.இந்நிலையில், நேற்றிரவு (ஜன.,01) போபாலில் இருந்து பிதாம்பூர் என்ற இடத்திற்கு பலத்த பாதுகாப்புடன் 12 கண்டெய்னர் லாரிகளில் சுமார் 337 மெட்ரிக் டன் நச்சுக் கழிவுகள் ஏற்றப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது. கடுமையான அறிவியல் நெறிமுறைகளையும் பின்பற்றி எரிப்பு செயல்முறை நடைபெற இருக்கிறது. 337 டன் நச்சுக் கழிவை மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் அழித்தால், மூன்று முதல் ஒன்பது மாதங்களுக்குள் கழிவுகள் எரிக்கப்படும் என்று அதிகாரி கூறுகிறார்.இதற்கிடையில், பிதாம்பூர் மற்றும் இந்தூரில் உள்ள உள்ளூர் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இது உள்ளூர் சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகளை மாசுபடுத்தும் என்று மக்கள் அஞ்சுகின்றனர். பிதாம்பூரில் உள்ள கழிவுகளை எரிக்கும் ஆலை மிக அதிநவீன ஆலை ஆகும். ஆலையின் தரைமட்டத்தில் இருந்து 25 அடி உயரத்திற்கு மேல் சிறப்பு பிளாட்பார்ம் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

venugopal s
ஜன 02, 2025 13:52

தமிழக அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இங்கு கொண்டு வந்து கொட்டி விடப் போகிறார்கள்!


Rangarajan Cv
ஜன 02, 2025 11:12

Tragedy is our past leaders helped Anderson of union carbide, escaped


karthik
ஜன 02, 2025 10:06

இதற்கும் மோடி ஆட்சி தான் தேவைப்பட்டிருக்கு... மக்களுக்கு இனிமேல் இந்த கேடுகெட்ட காங்கிரஸ் அதன் கூட்டணிகள் தேவை இல்லை.


hariharan
ஜன 02, 2025 09:24

வாரன் ஆன்டர்சன்னை இந்தியாவிலிருந்து தப்பிக்கவிட்ட காங்கிரஸின் ராஜீவ்காந்தி, அர்ஜுன் சிங் ஆகியோரின் குடும்பம் உருப்படாது. எந்த ஒரு பொறுப்பையும் எடுத்துக்கொள்ளாத காங்கிரஸ் இப்பொழுது இருக்கிற ராகூலுக்கு தெரியுமா?


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
ஜன 02, 2025 13:07

திரு.ராகுல் அவர்களுக்கு அப்போது வயது 14. பள்ளி பருவம். இப்போது கேட்டால் தெரியாது என்று தான் சொல்வார். திரு.ராகுல் அவர்கள் குடும்பம் மறைந்த முன்னாள் பிரதமர் மற்றும் தங்கள் நெருங்கிய உறவினர் திரு.ஜவஹர்லால் நேரு அவர் மனைவி திருமதி கமலா நேரு இவர்களையே மறந்து போய் வருடங்கள் பல கழிந்து போயின. இதையா ஞாபகம் வைத்து இருக்க போகிறார். யூனியன் கார்பைடு என்று கூறினால் நமது தமிழக முதலமைச்சர் மற்றும் ராகுலின் நெருங்கிய நண்பர் மதிப்பிற்குரிய மாண்புமிகு திரு.ஸ்டாலின் அவர்களிடம் கேட்டு அது ஒன்றிய காரியவகை ஆகவே நீங்கள் ஒன்றிய அரசுக்கு எதிராக ஒரு பதிவு எக்ஸ் தளத்தில் உங்கள் எக்ஸ் தள நிர்வாகியிடம் சொல்லி சும்மா போட்டு வையுங்கள் என்று இவரும் அவருக்கு அறிவுரை கூறுவார்.


Swamimalai Siva
ஜன 02, 2025 08:37

On the fateful day, I was travelling to Delhi, and I just crossed the Bhopal Railway Station, few minutes before the tragedy.


சமீபத்திய செய்தி