உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வர்த்தகம் ஆயுதமாக்கப்பட்டது: இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி என்கிறார் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர்

வர்த்தகம் ஆயுதமாக்கப்பட்டது: இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி என்கிறார் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'வர்த்தகம் இப்போது ஆயுதமாக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க வரிகள் இந்தியாவுக்கு ஒரு எச்சரிக்கை மணி' என முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னரும், பிரபல பொருளாதார நிபுணருமான ரகுராம் ராஜன் தெரிவித்தார்.ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் காரணத்தால், இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் 25 சதவீதம், 25 சதவீதம் அபராத வரி என மொத்தம் 50 சதவீத வரியை போட்டு தீட்டி உள்ளார். இந்த 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்துள்ளது. இது குறித்து முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறியதாவது: வர்த்தகம், நிதி, முதலீடு இப்போது ஆயுதமாக்கப்பட்டு உள்ளது. இந்தியா மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மிகவும் வருத்தம்

அமெரிக்க வரிகள் இந்தியாவுக்கு ஒரு எச்சரிக்கை மணி. இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா விதித்த அதிக வரிகள் மிகவும் வருத்தம் அளிக்கிறது. எந்தவொரு ஒற்றை வர்த்தக கூட்டாளியையும் சார்ந்திருப்பதை இந்தியா குறைக்க வேண்டும் என்பதை இது தெளிவுப்படுத்தி உள்ளது. நாம் எந்தவொரு நாட்டையும் பெரிய அளவில் சார்ந்து இருக்க கூடாது. ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதி தொடர்பான தனது கொள்கையை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

எண்ணெய் கொள்முதல்

இதனால் யார் பயன் அடைகிறார்கள்? யார் பாதிக்கப்படுகிறார்கள் என்று நாம் கேட்க வேண்டும். சுத்தகரிப்பு நிறுவனங்கள் அதிகப்படியான லாபங்கள் ஈட்டுகின்றன. ஆனால் ஏற்றுமதியாளர்கள் வரிகள் மூலம் அதிக ரூபாயை செலுத்துகின்றனர். நன்மை மிகவும் பெரிதாக இல்லாவிட்டால், இந்த கொள்முதலைத் தொடர வேண்டுமா என்று பரிசீலிப்பது மதிப்புக்குரியது. புவிசார் அரசியல் பிரச்னை இல்லை. எந்த நேரத்திலும் நாம் யாரையும் சார்ந்து இருக்க கூடாது.நமது ஏற்றுமதி சந்தைகளை நாம் பன்முகப்படுத்த வேண்டும். சீனா, ஜப்பான், அமெரிக்கா அல்லது வேறு யாருடனும் இணைந்து பணியாற்றுங்கள். ஆனால் அவர்களை சார்ந்து இருக்காதீர்கள். முடிந்தவரை தன்னம்பிக்கை உடன் இருங்கள். மாற்று வழிகள் உங்களிடம் இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

மிகப்பெரிய அடி

அதிக வரிவிதிப்பு இந்தியா- அமெரிக்க உறவுகளுக்கு மிகப்பெரிய அடி. இந்த நடவடிக்கை குறிப்பாக விவசாயிகள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் போன்ற சிறிய ஏற்றுமதியாளர்களை பாதிக்கும். அவர்களது வாழ்வாதாரத்தை ஆபத்தில் ஆழ்த்தும். இந்த வரி விதிப்பு அமெரிக்க நுகர்வோருக்கும் தீங்கு விளைவிக்கும். அவர்கள் இப்போது 50 சதவீத விலையில் பொருட்களை வாங்குவார்கள். இவ்வாறு ரகுராம் ராஜன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 62 )

ManiMurugan Murugan
ஆக 29, 2025 00:10

ManiMurugan Murugan அமெரிக்காவின் இந்த நடவடிக்கை அவர்களின் பயத்தால் வந்தது அவ்வளவு தான் இதற்கு அடி ப் பணி ந் தா ல் நமது வளர்ச்சி தடை ப் படும் அவர்கள் கேட்பதற்கு எல்லாம் தலையாட்ட வேண்டும் உலகில் வேறு நாடுகள் இல்லை என்பது போல் பேசுவது தவறு


கண்ணன்
ஆக 28, 2025 17:53

எப்போதுமே வர்த்தகம் ஒரு ஆயுதம்தான் இது இவருக்குப் புரிய இவ்வளவு காலம் ஆகிவிட்டது!


joe
ஆக 28, 2025 17:41

அமெரிக்காவில் டாலரின் மதிப்பும் பொருளாதாரமும் பிற்போக்கான நிலைக்கு செல்லும் . ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவை காய் கழுவும் .


R SRINIVASAN
ஆக 28, 2025 15:09

Elementary advice from a so called economics expert. He can give such advice to RG if and when the latter becomes PM


raja
ஆக 28, 2025 14:09

இந்த ஆளை போன்றோர் இந்தியாவை புதை குழியில் புதைத்து விடுவார்கள்...


joe
ஆக 28, 2025 14:02

நீங்கள் சொல்வது சரிதான். சீனா தரை வழி மார்க்கமாக ஐரோப்பிய நாடுகளுடன் பெரும் பொருளாதாராத்தை கொண்டுள்ளது . நமக்கு அதைப்போல தரை வழி மார்க்கம் அமைய வில்லை என்பதை ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ளவேண்டும் .இருந்தாலும் நாம் ஐரோப்பிய நாடுகளுடன் பொருளாதார வர்த்தகத்தை மேற்படுத்தவேண்டும் .ஐரோப்பிய நாணயத்துக்கும் மதிப்பு கொடுத்து கொரியா வர்த்தகத்தையும் ஐரோப்பிய நாணயத்துக்கு கொன்று வர வேண்டும் .நியூயார்க்கில் உள்ள வங்கி கணக்கை WITHDRAW செய்து ஐரோப்பிய நாட்டின் வங்கிகளில் வர்த்தக கணக்கை கொண்டு வந்து ஐரோப்பிய நாணயத்தின் வழியாக வர்த்தகம் செய்யவேண்டும் .அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து அமெரிக்கர்களின் விலைவாசி கண்டிப்பாக உயரும் .அமெரிக்க டாலரின் மதிப்பு ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார சுழற்சியில் நிர்ணயமாகிறது .கண்டிப்பாக டாலரின் மதிப்பு பிற்போக்காக மாறி அமெரிக்காவில் விலைவாசி உயரும் .


K.Uthirapathi
ஆக 28, 2025 13:29

இரகுராம் இராஜன், கான் கிராஸின் கைக்கூலி.


Mohan
ஆக 28, 2025 12:54

அய்யா இவர் பேச்சை கேக்காதீங்க..இவரும் டிரம்ப், ராகுல் INDI கூட்டணி எல்லாம் கூட்டு காலாவணிக ...நாம் இதை திறம்பட சமாளிப்போம் ...இந்திய பொருள்களையே முடிந்தளவு வாங்குவோம் ..இதுவும் ஒரு போர் தான் ..டிரம்ப் எவ்ளோ நாள் இருக்க போறார் ...அதுக்கு அப்பறோம் மாறிடும் ..அதுவரை பொறுக்க வேண்டும் பொதுமக்கள் அனைவர்க்கும் வேண்டுகோள் ...நாட்டுடன் நம் கொள்கையிக்கும் துணை இருக்க வேண்டும் ...அமெரிக்கா காலுல போய் விழுங்க சொல்றார் இவர்


Sudha
ஆக 28, 2025 12:52

சொல்லப்போனால் இந்தியாவின் நல்ல காலம் துவங்கி விட்டது, மோசமான பவுலிங் க்கு எதிராக அருமையான பேட்டிங் எப்படி இருக்குமோ அது போல டிரம்ப் க்கு எதிராக மோடி அவர்களின் ஆட்டம். ஆறே மாதத்தில் நிலைமை சரியாகும். கோவிட் கால நடவடிக்கை சாட்சி


Narayanan
ஆக 28, 2025 12:52

திமுகவின் குழுத்தலைவர் இப்படித்தான் பேசுவார் . ஸ்டாலின் அரசிடம் காசுவாங்கும்போது அதற்கு ஏற்றாப்போல் குலைக்கவேண்டாமா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை