உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவுடன் தான் வர்த்தகம்! வரிசை கட்டும் உலக நாடுகள்!

இந்தியாவுடன் தான் வர்த்தகம்! வரிசை கட்டும் உலக நாடுகள்!

புதுடில்லி: இந்தியாவுடன் வர்த்தகம் செய்வதற்கு, உலக நாடுகள் தயாராக உள்ளதாக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஸ் கோயல் கூறினார். புதுடில்லியில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் கூறியதாவது:இந்தியாவின் பலமான பொருளாதார அடித்தளம் காரணமாக, அனைத்து உலக நாடுகளும் இங்கு முதலீடு செய்யவும், வர்த்தகம் செய்யவும் விரும்புகின்றன.ஏன் என்றால், இங்கு பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது. நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு, 59 லட்சம் கோடி ரூபாயை தாண்டி இருக்கிறது. பாதுகாப்பான, வலுவான பொருளாதார வளர்ச்சி விகிதம் ஆகிய அனைத்து நிலைகளும், நம்முடன் வர்த்தகம் செய்வதற்கு வசதியாக இருப்பதால், அனைவரும் இங்கு தொழில் வர்த்தகம் செய்ய விரும்புகின்றனர்.இந்தியாவை, மிகுந்த நம்பிக்கையான பங்குதாரர் நாடாக, உலக நாடுகள் பார்க்கின்றனர்.இவ்வாறு பியூஸ் கோயல் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை