உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி யமுனா கதரில் போக்குவரத்து மாற்றம்

டில்லி யமுனா கதரில் போக்குவரத்து மாற்றம்

புதுடில்லி:டில்லி யமுனா கதரில் நான்கு நாள் நடக்கும் 'ராம் கதா' நிகழ்ச்சியை முன்னிட்டு, இன்று முதல் 3ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, டில்லி மாநகரப் போலீஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு: வடகிழக்கு டில்லி யமுனா கதர் பகுதியில், திரேந்திர சாஸ்திரியின் 'ராம் கதா' நிகழ்ச்சி இன்று துவங்கி 3ம் தேதி வரை நடக்கிறது. இன்று மதியம் 12:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை 'கலாஷ் யாத்ரா' நடக்கிறது.அதை முன்னிட்டு, சாஸ்திரி பூங்கா சிக்னல் முதல் இரண்டாவது புஸ்தா, மூன்றாவது புஸ்தா, ஐந்தாவது புஸ்தா, கஜூரி சவுக் ஆகிய இடங்களில் இன்று முதல் 3ம் தேதி வரை போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு போக்குவரத்து மாற்றம் குறித்து பொருத்தமான இடங்களில் அறிவிப்புகள் வைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக போக்குவரத்து போலீசாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதைகளை பின்பற்ற வேண்டும். போக்குவரத்து போலீசாரின் அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ