மேலும் செய்திகள்
மூன்று கடல் ஆம்புலன்ஸ் மீன் வளத்துறை திட்டம்
01-Oct-2024
பெங்களூரு: ஆம்புலன்ஸ்கள் சுமூகமாக செல்ல வழி வகுக்கும் வகையில், பெங்களூரு நகர போக்குவரத்து போலீசார், சோதனை முறையில் செயல்படுத்திய 'இ - பாத்' செயலிக்கு வெற்றி கிடைத்துள்ளது.கர்நாடகா மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், நோயாளிகள் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ்களில், பெங்களூரின் வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு வருகின்றனர்.வாகன நெருக்கடியால், ஆம்புலன்ஸ்கள் நோயாளிகளை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, பெரும் சவாலாக உள்ளது. பல சந்தர்ப்பங்களில் மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல், நோயாளி இறந்த சம்பவங்களும் நடந்துள்ளன. சிக்னல் நிர்வகிப்பு
இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில், போலீசார் புதிய தொழில்நுட்பத்தை வகுத்தனர். 'இ - பாத்' தொழில்நுட்ப உதவியுடன், போக்குவரத்து சிக்னலை நிர்வகிக்கும் திட்டத்தை, சோதனை முறையில் செயல்படுத்தினர். இந்த செயலியுடன் இணைக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ்கள், சிக்னல் இல்லாமல் பயணம் செய்யலாம்.ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், ஓட்டுனர்கள், அமைப்புகளுடன் போக்குவரத்து பிரிவு போலீஸ் கமிஷனர் அனுசேத், ஆலோசனை நடத்தி செயலி பயன்படுத்துவது, ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களின் பொறுப்பு குறித்து, தகவல் பரிமாறிக் கொண்டார். சோதனை முறையில் செயல்படுத்திய திட்டம், வெற்றி அடைந்துள்ளது. ஜி.பி.எஸ்.,
இதுகுறித்து, போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிக்கை:பெங்களூரில் 2,000 ஆம்புலன்ஸ்கள் இயங்குகின்றன. அனைத்து ஆம்புலன்ஸ்களுக்கும், ஜி.பி.எஸ்., சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. இதை போக்குவரத்து நிர்வகிப்பு மையத்துடன் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.ஆம்புலன்சில் நோயாளிகளை ஏற்றிய பின், 'இ - பாத்' செயலியில் தகவல் தெரிவிக்க வேண்டும். போக்குவரத்து நெருக்கடியில் ஆம்புலன்ஸ்கள் சிக்கினால், போக்குவரத்து போலீசார் உதவிக்கு வருவர்.ஓட்டுனர்கள் ஸ்மார்ட் போனில் உள்ள பிளே ஸ்டோரில் இருந்து இ - பாத் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். போக்குவரத்து நெருக்கடியில் சிக்குவது, தகவல் போக்குவரத்து நிர்வகிப்பு மையத்துக்குச் செல்லும். அதன்பின் ஆம்புலன்ஸ்கள் போக்குவரத்துக்கு வழி ஏற்படுத்தப்படும்.சிக்னல் அருகில் ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்பே, தகவல் தெரிந்து போக்குவரத்தை சரி செய்வதே, இ பாத் செயலியின் நோக்கம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
01-Oct-2024