உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மோதி 2 பேர் உயிரிழந்த சோகம்; 2 பேர் காயம்

சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மோதி 2 பேர் உயிரிழந்த சோகம்; 2 பேர் காயம்

ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் பலோட் மாவட்டத்தில் ரயில் தண்டவாளத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது சரக்கு ரயில் மோதியதில் தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர். சத்தீஸ்கரின் பலோட் மாவட்டத்தில் இன்று (ஜூன் 10) ரயில் தண்டவாளத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது சரக்கு ரயில் மோதியதில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டல்லிராஜ்ரா-துர்க் ரயில் பாதையில் டல்லிராஜ்ரா மற்றும் குசும்காசா நிலையங்களுக்கு இடையில் அதிகாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நேற்று (ஜூன் 09) மும்பையில், கூட்ட நெரிசல் காரணமாக புறநகர் ரயிலில் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த ரயில்வே போலீஸ் கான்ஸ்டபிள் உட்பட நான்கு பேர் கீழே விழுந்து உயிரிழந்தனர்; ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ