உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூரில் வெற்றி கொண்டாட்டத்தில் நிகழ்ந்த சோகம்: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

பெங்களூரில் வெற்றி கொண்டாட்டத்தில் நிகழ்ந்த சோகம்: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

பெங்களூரு: பெங்களூரு கிரிக்கெட் அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.சாம்பியன் கோப்பையுடன் திரும்பிய பெங்களூரு அணி வீரர்களை காண ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8429okvr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஜனாதிபதி திரவுபதி முர்மு பெங்களூரு மைதானத்தில் ஏற்பட்ட துயரமான சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது அதிர்ச்சி அளிப்பதாகவும், மனதை நொறுங்கச் செய்வதாகவும் உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய கடவுளை வேண்டுகிறேன். பிரதமர் மோடிபெங்களூருவில் நடந்த விபத்து மிகவும் வேதனையளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.காங்கிரஸ் எம்.பி., ராகுல் பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் மனதை உலுக்குகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும். இந்த துயரமான நேரத்தில் பெங்களூரு மக்களுக்கு ஆதரவாக நான் நிற்கிறேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் கர்நாடக அரசு வழங்க வேண்டும். இந்த சோகம் ஒரு வேதனையான நினைவூட்டல். எந்தவொரு கொண்டாட்டமாக இருந்தாலும் பாதுகாப்பு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.கர்நாடகா முதல்வர் சித்தராமையா சின்னசாமி ஸ்டேடியம் அருகே நடைபெற்ற வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மகிழ்ச்சியின் ஒரு தருணத்தை துக்கம் மறைத்துவிட்டது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். வெற்றி அணிவகுப்பை அனுமதிக்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, ஆனால் மைதானத்திற்கு அருகில் மக்கள் கூட்டம் அலைமோதியது இந்த துயரத்திற்கு வழிவகுத்தது. எப்போதும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். அன்புமணி (பா.ம.க.,)அளவு கடந்த கூட்டம் வரும் என்பதை கணித்து அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் வெற்றிக் கொண்டாட்டத்தை இன்னும் சில நாட்களுக்கு தள்ளி வைத்திருக்க வேண்டும்.இவற்றைச் செய்யத் தவறிய கர்நாடக அரசும், ஆர்சிபி அணி நிர்வாகமும் தான் உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்.தமிழக பாஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பெங்களூரு அணி வீரர்களை பார்க்க குவிந்த கூட்டத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு கர்நாடக முதல்வர் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்று இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நேரில் ஆறுதல் இது குறித்து கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சின்னசாமி ஸ்டேடியம் அருகே இன்று நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். இந்த கடினமான தருணங்களில் பாதிக்கப்பட்டவர்களிடம் பேசும்போது வருத்தமாக இருந்தது. மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து உதவிகளும் அரசு செய்யும் என அவர்களிடம் உறுதியளித்தேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்பாவி
ஜூன் 04, 2025 21:39

நைனாவுக்கு விவஸ்தையே கிடையாது. வேலை வெட்டியத்து ரசிகர்கள்னு போய் சின்ன(சாமி) ஸ்டேடியத்தில் கும்மினா சாவாம என்ன செய்வாங்க? முதலமைச்சர்தான் போகச்சொன்னாரா? குஜராத்ல பாலம் கவுந்து நூத்துக் கணக்கான பேர் செத்தபோது தனிப்பட்ட முறையில் யார் பொறுப்பேற்றார்?


அப்பாவி
ஜூன் 04, 2025 21:36

ரோடு ஷோ ல கூட இப்பிடி நடந்ததில்லை


ديفيد رافائيل
ஜூன் 04, 2025 21:06

இவனுங்க சாகட்டுமே இதெல்லாம் நாட்டுக்கு பெருமை இல்லை. பேசாம வீ்ட்டில் இருந்து TV பார்த்து enjoying பண்ண வேண்டியது தானே. கிரிக்கெட் வீர்ர்கள் price money ல் இருந்து 1 rupee கூட தர மாட்டாங்க. கிரிக்கெட் வீரர்கள் ஜெயிச்சாங்க ஜாலியா இருக்காங்க அவ்வளவு தான். இவனுங்க சாகட்டும் தப்பே இல்லை.


Brahamanapalle murthy
ஜூன் 04, 2025 20:50

whether the court will extend the same logic as had been done to Allu arjiun who was arrested for similar issue last year. The owners of the RCB should be held responsible and put behind the bars, applying the logic adopted to Allu Arjun actor. But the Lobby is bigger and there will be lawyers earning crores to defend them.


Nada Rajan
ஜூன் 04, 2025 20:42

பெங்களூர் அணியினர் விரைவில் பொறுப்பேற்க வேண்டும்


Palanisamy Sekar
ஜூன் 04, 2025 20:38

இளம் தளிர்களாக இளைஞர்களின் மரணம் தேசத்துக்கே களங்கம். ஒரு மாநில அரசாங்கத்திற்கு இதுதான் முக்கிய பணியா என்ன? மாநில அரசின் பங்கு என்ன. இவர்களின் வெற்றிக்கு மாநில முதல்வரும் து முதல்வரும் அவசியம் கலந்து கொள்ள வேண்டியது அவசியமா? பலியான இளைஞர்களின் குடும்பத்திற்கு இவர்கள்தான் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். இதிலும் பணம் பாய்ந்திருக்க வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ் ஆட்சியின் லட்சணம் இப்போ உலகமே சிரிக்குது. பாவம் அப்பாவி குழந்தைகள்


மூர்க்கன்
ஜூன் 04, 2025 22:44

உங்களை தெரியும் சேகரு??