உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜார்க்கண்டில் சோகம்; சத் பூஜை கொண்டாட்டத்தின் போது நீரில் மூழ்கி 15 பேர் பலி

ஜார்க்கண்டில் சோகம்; சத் பூஜை கொண்டாட்டத்தின் போது நீரில் மூழ்கி 15 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஞ்சி: ஜார்க்கண்டில் வெவ்வேறு இடங்களில் சத் பூஜை கொண்டாட்டத்தின் போது நீரில் மூழ்கி 15 பேர் உயிரிழந்தனர்.சூரியனை வழிபடும் திருவிழா சத் பூஜை என்று வட மாநிலங்களில் அழைக்கப்படுகிறது. சூரியனின் சக்திக்கும், ஆற்றலுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், ஏரியில் நின்று பக்தர்கள் வழிபாடு நடத்தினர். அந்தவகையில், ஜார்க்கண்ட் முழுவதும் சத் பூஜை கொண்டாட்டங்களின் போது 15 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் குளங்கள் மற்றும் ஆறுகளில் பிரார்த்தனை செய்யும் போது அல்லது குளிக்கும்போது நீரில் மூழ்கி இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர்களில் சிறுவர், சிறுமியரும் அடங்குவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

pmsamy
அக் 29, 2025 07:23

உயிர் இழந்தது வருத்தம்


Sivakumar
அக் 29, 2025 05:57

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தற்காப்பு கலைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் நீந்துவதற்கு கொடுக்கவேண்டும். நடுநிலை பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நீந்த கற்றுக்கொடுக்கலாம்.


ஜெய்ஹிந்த்புரம்
அக் 29, 2025 05:34

உயிரிழந்தவர்களில் சிறுவர், சிறுமியரும் அடங்குவர்.


ஜெய்ஹிந்த்புரம்
அக் 29, 2025 01:55

சென்ற வருடம் இதே நிகழ்வில் 60 உயிர்கள் பீகாரில் மட்டும் பலி. 2022 இல் 20 க்கும் மேலான பெண்கள், குழந்தைகள் பலி. வருடாவருடம் நடக்கும் அவலம். போனது உயிராக தெரியவில்லையா?


ஜெய்ஹிந்த்புரம்
அக் 29, 2025 01:43

வருஷா வருஷம் நடந்தாலும் நிற்காத அவலம், மாநில காவல்துறை என்ன செய்துகொண்டு இருந்தாங்கன்னு கேட்கலாமா?


ஜெய்ஹிந்த்புரம்
அக் 29, 2025 01:39

ஆளுக்கு 10 லட்சம், 20 லட்சம் கொடுக்க மாட்டீங்களா?


Ramesh Sargam
அக் 28, 2025 23:11

இந்தியாவில் பல விபத்துக்கள் மக்களின் அஜாக்கிரதையால் ஏற்படுகின்றன. மக்கள் முதலில் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். குறிப்பாக அதிக மக்கள் கூடும் இடங்களில். சூரிய பகவானே இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும்.


ஜெய்ஹிந்த்புரம்
அக் 29, 2025 05:34

அப்போ காவல்துறையின் சொதப்பலால் இல்லீங்களா? வருடாவருடம் நிகழும் அவலம் இது. திட்டமிட்ட பாதுகாப்பு வழங்க துப்பில்லையா என்று அண்ணாமலை கேட்க மாட்டாரா?


Muthukumar
அக் 28, 2025 22:18

Rip