உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹாராஷ்டிராவில் வதந்தியால் ஏற்பட்ட துயரம்: ரயில் மோதி 12 பேர் உயிரிழப்பு

மஹாராஷ்டிராவில் வதந்தியால் ஏற்பட்ட துயரம்: ரயில் மோதி 12 பேர் உயிரிழப்பு

மும்பை: மஹாராஷ்டிராவில் ரயிலில் தீப்பிடித்ததாக பரவிய வதந்தியால், தண்டவாளத்தில் குதித்த பயணிகள் மீது மற்றொரு ரயில் மோதியது. இதில், 12 பேர் உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் இருந்து உ.பி.,யின் லக்னோவுக்கு புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பியது. மஹாராஷ்டிராவின் ஜல்கான் பகுதியை கடந்த போது, ரயிலில் தீவிபத்து ஏற்பட்டதாக வதந்தி பரவியது. இதனையடுத்து 30 முதல் 40 பயணிகள் உயிர் பயத்தில் ரயிலில் இருந்து குதித்து தண்டவாளத்தை கடக்க முயன்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ilf0n5n0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது, மறுபுறத்தில் டில்லியில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் இவர்கள் மீது மோதியது.இவ்விபத்தில் 12 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். இன்னும் சிலர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் மீட்புப்படையினர் சம்பவ இடத்தில் விரைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

உ.பி., முதல்வர் ஆறுதல்

விபத்து குறித்து அறிந்த உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவதாக தெரிவித்து உள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Rajasekar Jayaraman
ஜன 23, 2025 08:32

தேசவிரோதிகள் ஏற்படுத்தும் கலவரங்களில் இதுவும் ஒன்று ரயில் மீது கல்லெரிவது சுத்தியலால் கண்ணாடிகளை உடைக்க முயல்வது ரயிலை தடம்புரள வைக்க பாறைகளை வைப்பது அதிலே இது புதிய உத்தி.


Krishnamurthy Venkatesan
ஜன 22, 2025 21:47

அப்படியே ரயில் தீ பிடித்திருந்தாலும், அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிப்பாட்ட முயற்சி செய்திருக்கலாம். ஆனாலும் இப்போது சொல்லி என்ன செய்வது? பாவம்.


BALACHANDRAN
ஜன 22, 2025 20:27

விதியா சகியா எவ்வளவு நல்ல ஆத்மாக்கள் உயிர் இழக்க இது மாதிரி சந்தர்ப்பங்கள் அமைகின்றன கடவுளை தினந்தோறும் நான் பிரார்த்தனை செய்கிறேன் துர் மரணம் ஏற்பட வேண்டாம். திரும்பி வராத உயிர் பகவான் சங்கல்பம்


தாமரை மலர்கிறது
ஜன 22, 2025 20:13

ரயில் புறப்படும்போது அதுவே கதவுகளை மூடப்படவேண்டும்.


R Bramananthan
ஜன 22, 2025 19:55

நிச்சயமாக சதி வேலைதான். ஏனெனில் எதிர்ப்புறம் ரயில் வரும் நேரம் தெரிந்து தான் புரளி கிளப்பி விட்டிருக்க வேண்டும்


Ramesh Sargam
ஜன 22, 2025 19:54

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு . அதுதான் நடந்திருக்கிறது அங்கே. ஏன் இந்த ஆத்திரமோ...?


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 22, 2025 19:31

வதந்தி பரவியதால் காரணம் சதியாக இருக்கலாம் ...... இதே போல நான்காண்டுகளுக்கு முன்பு ஒரு சம்பவம் நடந்துள்ளது ......


அப்பாவி
ஜன 22, 2025 19:16

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.


Sudha
ஜன 22, 2025 19:09

இது சதி வேலையாக இருக்கலாம். விசாரணை தேவை


சமீபத்திய செய்தி