| ADDED : ஆக 03, 2025 12:49 PM
லக்னோ: உத்தர பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.உத்தரபிரதேச மாநிலம் கோண்டாவில் கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9gashhu1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்தனர். 15 பேருடன் சென்ற கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து நிகழ்ந்துள்ளது என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில், அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கோண்டா மாவட்டத்தில் நடந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பு மிகவும் வருத்தமளிக்கிறது. துயரத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். ரூ.5 லட்சம் நிவாரணம்
இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கவும், காயம் அடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இறந்தவர்கள் ஆன்மா சாந்தி அடையவும், காயமடைந்தவர்கள் விரைவாக குணமடையவும் ராமரைப் பிரார்த்திக்கிறேன்.ஓம் சாந்தி. இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.