மேற்குவங்கத்தில் சோகம்: பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பரிதாப பலி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
கோல்கட்டா: மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் கனமழை காரணமாக பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.மேற்குவங்க மாநிலத்தில் இமயமலைக்கு உட்பட்ட டார்ஜிலிங், கலிம்போங், கூச் பெஹார், ஜல்பைகுரி மற்றும் அலிப்பூர்துவார் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. டார்ஜிலிங் மாவட்டத்தில் மிரிக் என்ற இடத்தில் கனமழை காரணமாக பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. மலைப்பகுதி மாவட்டங்களில் இரவு முழுவதும் இடைவிடாமல் பெய்து வரும் மழையால், அண்டை மாவட்டமான ஜல்பைகுரியின் மல்பஜாரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் மேற்கு வங்கத்தில் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ததாகவும், பன்குராவில் அதிகபட்சமாக 65.8 மி.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக, பாலம் இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.