உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடைபாதையில் தூங்கியவர்கள் மீது லாரி மோதியது; இரண்டு குழந்தைகள் உட்பட 3 பேர் பலி

நடைபாதையில் தூங்கியவர்கள் மீது லாரி மோதியது; இரண்டு குழந்தைகள் உட்பட 3 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: புனேயில் நடைபாதையில் தூங்கியவர்கள் மீது லாரி ஏறி இறங்கியதில், இரண்டு குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.மஹாராஷ்டிரா மாநிலம் புனே நகரின் வகோலி சௌக் பகுதியில், நடைபாதையில் 12 பேர் அசந்து தூங்கி கொண்டு இருந்தனர். அந்த வழியாக, வந்த லாரி, நிலைதடுமாறி அவர்கள் மீது ஏறி இறங்கியது. இதில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனை செய்ய, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், 6 பேர் பலத்த காயமுற்றனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. லாரியை இயக்கிய, 26 வயதான சங்கரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். போலீசார் விசாரணையில் டிரைவர் குடிப்போதையில் இருந்தது தான் விபத்துக்கு காரணம் என தெரியவந்தது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். குடிப்போதையில் லாரியை சங்கர் இயக்கியதால், 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

N.Purushothaman
டிச 23, 2024 12:05

இந்தியாவின் இளைய மனிதவள சக்தியை சீர்குலைக்க மிகப்பெரும் சதி திட்டமிட்டு நடைபெற்று கொண்டு இருக்கிறது ....அதை இன்றைய இளைஞர்கள் உணர்ந்து போதைக்கு அடிமையாகாமல் உழைப்பில் கவனம் செலுத்த வேண்டும் ....மது ,போதை மருந்து ,செயற்கை போதை பொருள், இன்னும் பல கண்மூடித்தனமாக சதிக்காரர்களால் இந்தியா முழுவதுவும் பரப்பப்பட்டு கொண்டு இருக்கிறது ....


மதி
டிச 23, 2024 10:21

அடடே... சொல்லியுருந்தா பிரதான் மந்திரீக்கி வீடு நடைபாதையிலேயே கட்டிக் குடுத்திருப்போம் ஹை.


வாய்மையே வெல்லும்
டிச 23, 2024 16:43

. தமிழ்நாட்டுல ஏழையின் வாழ்வாதார நிலைமை என்ன கீழ்த்தரமாக இருப்பது என்பதை புரியாமல் எப்பவும் போல இன்னொரு மாலதியின் அவலங்களை திராவிட உருட்டு உருட்டியே காலம் தள்ளுங்க. உங்களுக்கு என்னவோ மாடல் ஆட்சி போதையில் சீர்கெட்டு போனது தெரியாதா இல்லாட்டி தெரிஞ்சும் நடிக்கிறீர்களா ??


அப்பாவி
டிச 23, 2024 10:20

இரட்டை எஞ்சின் சர்க்கார். கதி சக்தி அபாராம். முன்னேற்றம் அமோகம். 140 கோடி மக்களுக்காக உழைக்கிறோம் ஹை.


Krishnamurthy Venkatesan
டிச 23, 2024 11:31

அடப்பாவி. டாஸ்மாக் பற்றியும் அதன் வாடிக்கையாளர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதை பற்றியும் வாய் திறந்தால் இருநூறு ரூபாய் கிடைக்காமல் போய்விடும். keep it up.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை