உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனிதர்களை கடிக்காமல் தடுக்க தெருநாய்களுக்கு பயிற்சி திட்டம்

மனிதர்களை கடிக்காமல் தடுக்க தெருநாய்களுக்கு பயிற்சி திட்டம்

பெங்களூரு: தெருநாய்களை கட்டுப்படுத்துவதற்கு பயிற்சியாளர்களை நியமிக்க, பெங்களூரு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூரில் தெருநாய்கள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவற்றுக்கு சரியான உணவு இல்லாததால் தான், மனிதர்களை கடிக்கிறது என்ற வாதங்கள் எழுந்தன. இதையடுத்து, தெருநாய்களுக்கு சிக்கனுடன் சாப்பாடு வழங்க, 2.88 கோடி ரூபாய் செலவில் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக பெங்களூரு மாநகராட்சி அறிவித்தது. இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. 'நாய்கள் சிக்கன் சாப்பிடுவதற்கு, கோடி கணக்கில் நிதி ஒதுக்குவதா' என பலரும் விமர்சித்தனர். இதனால், இத்திட்டத்தில் இருந்து மாநகராட்சி பின்வாங்கியது. தற்போது, அடுத்த கட்டமாக, தெருநாய்களை கட்டுப்படுத்த, பயிற்சியாளர்களை நியமிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதன்படி, தெருநாய்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள பகுதிகளில், போலீஸ் துறையில் நாய் பயிற்சியாளராக இருந்தவர்கள் நியமிக்கப்படுவர். இவர்கள், நாய்களுக்கு பயிற்சி அளிப்பர். இதன் மூலம் நாய்கள், மனிதர்களை தாக்குவது குறையும். பயிற்சியாளர்களுக்கு ஒரு நாளைக்கு, 233 ரூபாய் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இப்படி, வித விதமாக மாநகராட்சி யோசித்தாலும், இதன் வாயிலாக தெருநாய்களை கட்டுப்படுத்த முடியுமா என, பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

சுந்தர்
ஆக 21, 2025 14:56

பயிற்சி எடுத்த நாய்கள் திருடர்களை விட்டு விடுமா?


visu
ஆக 21, 2025 10:18

எவனெவன் விலங்கு ஆர்வலர் என்று போராடுறானோ அவனெல்லாம் சைவம் மட்டுமே உண்ண வேண்டும் .அப்புறம் அவங்களையெல்லாம் பிடித்து நாய்களை அடைக்கும் கொட்டகையில் பராமரிப்பு பணிக்கு சம்பளமில்லாமல் சேவை செய்ய சொல்லலாம் .ஊரவலாம் போக நேரமிருக்கு இல்ல


Chan
ஆக 21, 2025 08:55

யார் அப்பன் வீட்டு பணம்? இந்த செலவுகளை நாய் ஆர்வலர்கள் மற்றும் பீட்டாவிடம் இருந்து வாங்கி செலவு செய்யட்டும் .


Svs Yaadum oore
ஆக 21, 2025 07:30

பயிற்சியாளர்களுக்கு ஒரு நாளைக்கு, 233 ரூபாய் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாம் ...200 ரூபாய்க்கு பயிற்சி கொடுக்க இவர்கள் என்ன தேனாம்பேட்டை திராவிட கொத்தடிமைகளா ??...இவர்கள் என்ன பயிற்சி கொடுப்பார்கள் ...


V RAMASWAMY
ஆக 21, 2025 07:19

அரசுத்துறை பணியாளர்களுக்கு லஞ்சம் வாங்காமல் பணி செய்ய பயிற்சி கொடுக்கும் திட்டம் கூட ஒன்று ஆரம்பிக்கலாம். தெருநாய்களைக் கட்டுப்படுத்துங்கள் என்று நீதிமன்றம் கூறியும் கேட்காமல் அடாவடிகள். எல்லாம் ஏதாவது திட்டமொன்றென்று சொல்லி ஆட்டை போடத்தான்.


Varadarajan Nagarajan
ஆக 21, 2025 07:09

ஆகா மிகஅருமையான விழுஞானபூர்வமான திட்டம். பொதுமக்களை ஒன்றும் செய்யாமல் ஊழல் அரசியல்வியாதிகளைமட்டும் மோப்பம்பிடித்து கடிப்பதற்கு பயிற்சியளிக்கவேண்டும். அரசியல்வியாதிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் இப்படியொரு சிறப்பு திட்டத்தை சீரியமுறையில் நடைமுறைப்படுத்துவது மிக மிக அத்தியாவசியமானது. குடிநீர், சாலைகள், கல்வி, பொது மருத்துவம் போன்ற திட்டங்களை பிறகு பார்த்துக்கொள்ளலாம். அவற்றுக்கு நிதி இல்லையென்றால் மக்கள் கடிக்காமல் பொறுத்துக்கொள்வார்கள். ஆனால் தெருநாய்கள் அப்படியில்லை கடித்துவிடும்.


D Natarajan
ஆக 21, 2025 06:10

அருமை. மேலும் சினிமா போட்டு பயிற்சி கொடுக்கலாம்


எவர்கிங்
ஆக 21, 2025 05:36

ஆசிரியர் சம்பளம் பயிற்சிக் கூட கடாடுமானம போங்கடா


Mani . V
ஆக 21, 2025 05:03

கொள்ளையடிக்க புதுப் புது ஐடியாவாக யோசிக்கிறாங்க.


SUBBU,MADURAI
ஆக 21, 2025 03:18

அப்படியே அந்த நாய்களின் வாலை நேராக நிமிர்த்தவும் பயற்சியளிக்க வேண்டும்... அடேய் நீங்கள்லாம் எங்கயிருந்துடா கிளம்பி வர்றீங்க?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை