உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தண்டவாளத்தில் கார் ஓட்டிய பெண்ணால் நின்ற ரயில்கள்

தண்டவாளத்தில் கார் ஓட்டிய பெண்ணால் நின்ற ரயில்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்: தெலுங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில், இளம்பெண் ஒருவர் காரை ரயில் தண்டவாளத்தில் அதிவேகமாக ஓட்டிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.தெலுங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள கொண்டக்கல் ரயில்வே கேட் -- சங்கர்பள்ளி இடையே ரயில் தண்டவாளத்தில், ஒரு பெண் நேற்று அதிகாலை காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றார். சங்கர்பள்ளியில் இருந்து ஹைதராபாத் நோக்கி தண்டவாளத்தில் கார் செல்வதைக் கண்ட ரயில்வே அதிகாரிகள், அந்த காரை துரத்திச் சென்றனர். ஆனால், அந்தப் பெண் காரை இன்னும் வேகமாக ஓட்டினார்.இதனால் செய்வதறியாது திகைத்த அதிகாரிகள், அந்த வழித்தடத்தில் வந்த 15 ரயில் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை அளித்து ரயில்களை நிறுத்தினர். குறிப்பாக, பெங்களூரிலிருந்து ஹைதராபாத் சென்ற ரயில்கள் வழியிலேயே நிறுத்தப்பட்டன. அதன்பின், பொது மக்களுடன் ரயில்வே ஊழியர்கள் இணைந்து காரை நிறுத்தி, அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் இருந்து வெளியே அழைத்து வந்தனர். அவர் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்தது.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்தப் பெண்ணை கைது செய்து காரை பறிமுதல் செய்தனர். அவர் குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து முழு விசாரணை நடந்து வருகிறது. தண்டவாளத்தில் காரை ஓட்டிச்சென்ற பெண்ணால், 45 நிமிடங்கள் வரை ரயில் சேவைகள் ஸ்தம்பித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

aaruthirumalai
ஜூன் 27, 2025 20:35

நடவடிக்கை என்ன?


அப்பாவி
ஜூன் 27, 2025 15:55

உ.பி காரனுங்க அடாவடி தாங்க முடியலை


Padmasridharan
ஜூன் 27, 2025 13:12

குடிபோதைதான் எல்லா குற்றங்களுக்கும் இப்ப காரணமா இருக்கு. இதை விக்கற அரசு, கஞ்சா போதையில் சும்மா கிடந்த நடிகர்கள பிடிச்சு வெச்சிருக்கு. என்ன சட்டமோ சாமி. . .


Yasararafath
ஜூன் 27, 2025 11:45

அந்த பெண்னே விட்டு இருந்தால் காருடன் தற்கொலை செய்து


rama adhavan
ஜூன் 27, 2025 10:06

தண்டவாளத்தில் ரயில் கார்கள் ஓடும். அதை பார்த்து முயற்சியோ?


veeramani
ஜூன் 27, 2025 09:35

மொபைல் ரீல் மோகத்தில் இந்த அயோக்கிய பெண் காரை ஓட்டிச்சென்றிக்கலாம் முதலில் சிறையில் அடைத்து ஜாமீன் கொடுக்காமல் சுமார் பத்து முதல் பதினைந்து வருடம் கடுமையான சிறை தண்டனை கொடுக்கவேண்டும்


Pandi Muni
ஜூன் 27, 2025 09:05

கைய கால முறிச்சி எரிஞ்சிட்டா இந்த மாதிரி இனி பண்ணாம தடுக்கலாம்.


Senthoora
ஜூன் 27, 2025 07:06

நல்லவேளை தமிழ்நாட்டில் நடக்கவில்லை, அல்லது டாஸ்மார்க்கை, திமுகவை வசபாடியிருப்பார்கள், அந்த பெண்ணுக்கு நிதானமா தண்டவாளத்தில் கார் ஒட்டியதுக்கு ஒரு அவார்ட் கொடுக்கலாம்.


krishna
ஜூன் 27, 2025 17:12

AAMAM SENTHOORA THAMIZH NAATIL PAALARUM THENAARUM ODUDHU.AAMAM SYDNEY ENA BOLIYAA POTTIYAA ILLA ANGA POYUM 200 ROOVAA COOLIKKU GOPALAPURAM AAYUTKAALA KOTHADIMAI VELAI CONTINUE SEIGIRAAYA.UZHAIRHU MUNNERU KEVALAM.


Palanisamy Sekar
ஜூன் 27, 2025 04:25

தமிழ்நாட்டிலும் விரைவில் இப்படி எதிர்பார்க்கலாம். குடிப்பழக்கம் போதையில் சாதனை புரிந்துவிட்டதாக எண்ணிவிடக்கூடாது. இதுவரையில் யாருமே ரயில் தண்டவாளத்தில் கார் ஒட்டியதாக சரித்திரம் படைக்கவில்லை. தெலுங்கானா சரக்கு நன்கு வேலை செய்துள்ளது. அதே சரக்கு இங்கேயும் வேண்டுமென்று குடிமகன்கள் சாரி தப்பா சொல்லிட்டேன் ஸ்டாலின் கோவிச்சுப்பார் மதுப்பிரியர்கள் கோரிக்கை வைக்கப்போகிறார்கள்.


Kasimani Baskaran
ஜூன் 27, 2025 04:01

முடியாத காரியத்தை போதையில் செய்து சாதித்து இருக்கிறார். டாஸ்மாக்கில் வேலை கொடுக்கலாம்.


Senthoora
ஜூன் 27, 2025 07:13

என்ன இப்படி சொல்லிட்டிங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை