உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோசடியை தடுக்க டிராய் புது கிடுக்கிப்பிடி: ஓடிபி கிடைப்பது தாமதமாகும்

மோசடியை தடுக்க டிராய் புது கிடுக்கிப்பிடி: ஓடிபி கிடைப்பது தாமதமாகும்

புதுடில்லி: குறுஞ்செய்தி மூலம் நடக்கும் மோசடிகளை தடுக்க டிராய் புது விதிகளை கொண்டு வந்துள்ளது. இது செப்., 1 முதல் அமலுக்கு வருகிறது. இதனால், மொபைல் போனுக்கு வரும் ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல் (ஓடிபி) கிடைப்பதில் தாமதம் ஆகும்.நவீன டிஜிட்டல் யுகத்தில் ஒவ்வொரு நாளும் புதுப்புது வகைகளில் மோசடி நடந்து வருகிறது. இதில் ஒன்று, மக்களின் மொபைல் போனுக்கு வரும் ஓடிபி ஐ பெற்று, அவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை எடுப்பது, லிங்க்- ஒன்றை அனுப்பி அதன் மூலம் தகவல்களை திருடி பணத்தை எடுப்பது போன்ற மோசடிகள் நடந்த வண்ணம் உள்ளன. இது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், இந்த வகை மோசடிகள் நின்றபாடில்லை.இந்நிலையில், இதனை கட்டுப்படுத்துவதற்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்( டிராய்) புது விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது. இதன்படி, எந்தவொரு நிறுவனம் மற்றும் அமைப்புகள் ஓடிபி அல்லது அங்கீகாரமான குறுஞ்செய்திகளை அனுப்புவதற்கு முன்னர் அதன் தலைப்பு மற்றும் தகவல்களை தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் பதிவு செய்ய வேண்டும். இத்தகைய குறுஞ்செய்திகளை ‛ ஸ்கேன்' செய்யவும், அதனை அணுகவும் டெலிகாம் நிறுவனங்களுக்கு அதிகாரம் உண்டு. இந்த புதிய விதிமுறைகளுக்கு உட்படாத தகவல்களும் தடை செய்யப்படும். அது வங்கிகள் அனுப்பும் ஓடிபி ஆக இருந்தாலும் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆக வேண்டும். இதனால், பயனர்களுக்கு ஓடிபி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.வங்கிகள் இந்த விதிமுறைகளுக்கு உடன்படவில்லை என்றால், பணப்பரிவர்த்தனை குறித்த தகவல்களை பெறுவதில் பயனர்களுக்கு தாமதம் ஏற்படும். வங்கிகள் மற்றும் செயலி அடிப்படையில் சேவை வழங்குபவர்கள், ஆகியன எந்த எண்ணில் இருந்து ஓடிபி அனுப்பப்படும் என்பதை ஆக.,31க்குள் பதிவு செய்ய வேண்டும். அதேநேரத்தில் இந்த நடவடிக்கை மோசடி நடவடிக்கைகளை குறைப்பதில் பெரும் பங்காற்றும் என டிராய் நம்பிக்கை தெரிவித்து உள்ளது. செப்.,1 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இதற்கு டிராய் செவிசாய்க்கவில்லை. மேலும், மொபைல்போன் மூலம் அழைப்பவரின் பெயரை, கேஒய்சி அடிப்படையில் மற்றவர்கள் தெரிந்து கொள்வதற்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து டிராய் செயல்பட்டு வருகிறது. இது அழைப்பவரின் உண்மையான விவரங்களை தெரிந்து கொள்ள உதவுவதுடன், ட்ரூகாலர் செயலி போன்றவற்றை மக்கள் சார்ந்து இருப்பதை குறைக்க உதவும். அரசு அளித்த ஆவணங்களில் உள்ள பெயரை, மற்றவர்கள் தெரிந்து கொள்ள முடிவதால், மோசடிகளை தடுக்க முடியும் என டிராய் நம்புகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Kanns
ஆக 29, 2024 09:00

Good Work


வைகுண்டேஸ்வரன்
ஆக 28, 2024 13:33

இனி IRCTC ல, சாதாரண குடி மகன்களால் டிக்கெட் புக் பண்ணவே முடியாது. ஏஜண்ட் கிட்ட தான் போயாகணும். எவ்வளவு தந்திரமாக, சாமானிய மக்களை சாவடிக்கிறாங்க பாருங்க. IRCTC ல இப்பவே டிக்கெட் புக் பண்ணுவது மிகவும் கஷ்டம். இடம் இருக்கிறது என்பதைப் பார்த்து, சூஸ் பண்ணி, captcha அடிச்சு, பயணிகள் பெயர்கள் அடிச்சு, பேமென்ட் பக்கம் வந்து கார்டு நம்பர், பேர், cv நம்பர் எல்லாம் அடிச்சு, OTP க்கு காத்திருந்து பேமெண்ட் பண்ணுவதற்குள் RAC அல்லது வைட்டிங் லிஸ்ட் ஆகிவிடுகிறது. இனி..?? சுத்தம்.. ஒரு டிக்கெட் கூட முடியாது.


கல்யாணராமன் சு.
ஆக 28, 2024 17:09

வைகுண்டேஸ்வரன் அவர்களுக்கு ஒரு நற்செய்தி ... நீங்கள் ஒவ்வொரு முறையும் அத்தனை தகவல்களையும் திரும்பவும் எழுத அவசியம் இல்லை.... தளத்தின் உள்ளே சென்று தங்களை பற்றிய அத்தனை தகவல்களையும் ஒரே ஒரு முறை பதிவு செய்துவிட்டால் , அடுத்த முறை அந்த தகவல்களை சுலபமாக பதிவிடலாம் ... அடுத்ததாக, கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தினால் மட்டுமே நீங்கள் சொல்லும் அத்தனை தரவுகளையும் பதிவிட்டுட்டு , OTP வருவதற்காக காத்திருக்கவேண்டும் . QR code முறையில் scan செய்தால் உடனே பணம் செலுத்தப்பட்டுவிடும் . ... ஆகவே நீங்க நினைக்கும் அத்தனை பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுவிடும் . .... இதை படித்தவுடன் அடுத்ததாக வேறு ஏதேனும் கற்பனை பிரச்சினைகளை பதிவிடுவீர்கள் என எதிர்பார்க்கிறேன் . .... என்னை ஏமாற்றி விடாதீர்கள் . ... நன்றி .


sridhar
ஆக 28, 2024 12:03

ஆனால் ஒரு மொபைல் போன் களவு போனால் இந்த நடவடிக்கையும் பயனற்று போகும், பயோ மெட்ரிக் கடவுச்சொல்லே தீர்வு.


sridhar
ஆக 28, 2024 12:03

ஆனால் ஒரு மொபைல் போன் களவு போனால் இந்த நடவடிக்கையும் பயனற்று போகும், பயோ மெட்ரிக் கடவுச்சொல்லே தீர்வு.


அப்பாவி
ஆக 28, 2024 11:59

என் அனுமதி இல்லாம எனக்கு கம்பியூட்டர் செயலிகள் மூலம் குறுஞ்செய்தி அனுப்புவதை நிறுத்துங்கடா. அதுக்கு நான் பதில் போடவும் முடியாது. இது டிராயுடன் நிறுவனங்கள் நடத்தும் கூட்டுக் களவாணித்தனம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை