உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுற்றுலா திட்டங்கள்

சுற்றுலா திட்டங்கள்

சுற்றுலா, கலை, கலாசாரம் மற்றும் மொழி தொடர்பான திட்டங்களுக்கு 139 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், தேசிய தலைநகர் டில்லி மாநகர், முக்கிய சுற்றுலா மையமாக மாறும்.சோனியா விஹார் முதல் ஜகத்பூர் ஷானி மந்திர் வரை யமுனை நதியில் படகுச் சுற்றுலா அறிமுகம் செய்யப்படும்.இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம், டில்லி மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.போர் நினைவுச் சின்னம், கர்தவ்ய பாதை, பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் பார்லிமென்ட் புதிய கட்டடம் உள்ளிட்ட டில்லியின் முக்கிய அடையாளங்களைச் சுற்றிப் பார்க்க, சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படும். மேலும், உணவுத் திருவிழா, இசைக் கச்சேரி மற்றும் குளிர்கால விழா நடத்தப்படும்.இசை, நடனம் உள்ளிட்ட துறைகளின் இளம் கலைஞர்களை கண்டுபிடித்து அறிமுகம் செய்ய 'திறமை வேட்டைத் திட்டம்' துவக்கப்படும். இந்த திட்டத்துக்கு 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மைதிலி மற்றும் -போஜ்புரி மொழி அகாடமிகளுக்கு 6.30 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ