மேலும் செய்திகள்
வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை
3 hour(s) ago | 10
மஜூலி, பழங்குடியின மக்களை காடுகளுக்குள் அடைத்து வைத்து, அவர்களின் கல்வி உள்ளிட்ட உரிமைகளை பா.ஜ., பறிக்க முயற்சிக்கிறது,'' என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் குற்றஞ்சாட்டிஉள்ளார். காங்கிரஸ் எம்.பி., ராகுல், தன் இரண்டாம் கட்ட பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையை கடந்த 14ல் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் துவக்கினார். இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் அவர் அசாம் சென்றார். வேறுபாடு
இங்குள்ள மஜூலி மாவட்டத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பழங்குடியினர் முன்னிலையில் ராகுல் நேற்று கூறியதாவது:நாங்கள் உங்களை முதல் குடிமக்கள் என்ற முறையில் ஆதிவாசிகள் என அழைக்கிறோம். ஆனால், பா.ஜ.,வினரோ, காடுகளில் நீங்கள் வசிப்பதால் வனவாசிகள் என அழைக்கின்றனர். இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது. உங்களை காட்டிற்குள் அடைத்து வைப்பதையே அக்கட்சி விரும்புகிறது. உங்கள் குழந்தைகள் பள்ளி, கல்லுாரிகளுக்கு சென்று கல்வி கற்பதை அக்கட்சியினர் விரும்பவில்லை. ஆங்கிலம் கற்பதையும், தொழில் செய்வதையும் அவர்கள் தடுக்க முயற்சிக்கின்றனர். உங்களிடம் இருந்து எடுக்கப்பட்டதை மீண்டும் அளிக்க நாங்கள் விரும்புகிறோம். நாடு முழுதும் உங்கள் நிலம் பறிக்கப்படுகிறது; வரலாறு அழிக்கப்படுகிறது. உங்களது நிலம், வனம் மற்றும் நீர் ஆகியவை மீண்டும் உங்களிடம் வழங்கப்பட்டாக வேண்டும். அதற்காக நாங்கள் சட்டம் இயற்றுவோம். நடைபயணம்
மணிப்பூரில் பல மாதங்களாக உள்நாட்டு போர் நடப்பது போன்ற சூழல் நிலவி வருகிறது. இருப்பினும், பிரதமர் மோடி ஒருமுறை கூட அங்கு செல்லவில்லை. ஆனால், நாங்கள் மணிப்பூரில் இருந்தே இந்த நடைபயணத்தை துவக்கியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். பொதுக்கூட்டத்துக்குப் பின் அங்குள்ள வைணவத் தலமான ஸ்ரீ அவுனியாத்தி சத்ராவுக்கு ராகுல் சென்றார்.
3 hour(s) ago | 10