மேலும் செய்திகள்
வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை
2 hour(s) ago | 9
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
7 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் சதம்; இந்திய அணி ரன் குவிப்பு
7 hour(s) ago
பொதுவாக மலை கிராமங்களில் வசிக்கும் மக்கள், பழங்குடியின மக்கள் படிப்பறிவு இல்லாதவர்கள். கூலி வேலை செய்து பிழைப்பு நடத்துவர் என்ற கருத்து பரவலாக உள்ளது. தங்களாலும் சொந்த தொழில் நடத்தி, வளமாக வாழ முடியும் என்பதை பழங்குடியினர் சாதித்து காண்பித்துள்ளனர். காட்டில் ஏராளமாக கிடைக்கும் மூலிகைகளை பயன்படுத்தி தொழிலதிபர்களாக வாழ்கின்றனர்.சொந்த தொழில் செய்ய, லட்சக்கணக்கான ரூபாய் முதலீடு தேவைப்படும் என்பது, தவறான கருத்தாகும். முயற்சியும், ஆர்வமும் இருந்தால் அனைத்தும் சாத்தியமே என்பதற்கு, பழங்குடியினர் உதாரணமாக வாழ்கின்றனர். வளங்கள்
இயற்கை நமக்கு ஏராளமான வளங்களை அள்ளித்தந்துள்ளது. ஆனால், இவற்றின் அருமையும், பெருமையும் நமக்கு தெரிவதில்லை. சிலருக்கு மட்டுமே இயற்கை வளங்களின் மகத்துவம் புரிந்துள்ளது.ஹாசன், பேலுாரில், அங்கடிஹள்ளி கிராமம் உள்ளது. இது ஹாசனில் இருந்து 20 கி.மீ., தொலைவில் உள்ளது. தற்போது இந்த கிராமம், 'ஹெர்பல் ஹேர் ஆயில் கிராமம்' என்றே பிரசித்தி பெற்றுள்ளது. அங்கடிஹள்ளி கிராமத்தில் வசிக்கும் மக்கள், பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் மற்றவரிடம் கைகட்டி வேலை பார்ப்பதில்லை. மாறாக சொந்த தொழில் செய்து, கை நிறைய பணம் சம்பாதிக்கின்றனர்.தங்கள் கிராமத்தின் வனத்தில் கிடைக்கும் மூலிகைகள், கேரளாவில் கிடைக்கும் மூலிகைகளை பயன்படுத்தி, ஹெர்பல் ஹேர் ஆயில் தயாரிக்கின்றனர். கிராமத்தில் 750 வீடுகள் உள்ளன. இவற்றில் 300 வீடுகளில் வசிக்கும் மக்கள், ஹேர் ஆயில் தயாரிக்கின்றனர். இவைகள் ஆன்லைன், ஆப்லைன் என, இரண்டிலும் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. 108 மூலிகைகள்
வனத்தில் பெருமளவில் விளையும், பல்வேறு விதமான 108 மூலிகைகளை சேகரிக்கின்றனர். இதை இடித்து எண்ணெய் எடுத்து, ஒரு வாரம் மூடி வைக்கின்றனர். அதன்பின் அதை காலை முதல் மாலை வரை, அடுப்பில் வைத்து காய்ச்சுகின்றனர். அந்த எண்ணெயுடன், தேங்காய் எண்ணெய் சேர்த்து, துணியால் வடிகட்டி பாட்டிலில் அடைக்கின்றனர். எந்த ரசாயனமும் கலக்காமல், இயற்கையான மூலப்பொருட்கள் மட்டுமே பயன்படுத்தி தயாரிப்பதால், தலைமுடிக்கு பாதிப்பு ஏற்படாது. செழிப்பாக வளரும்.பழங்குடியினர் தயாரிக்கும் ஹேர் ஆயிலுக்கு அதிக டிமாண்ட் உள்ளது. ஹாசன் பேலுார் பிரதான சாலையில், சாலை ஓரங்களில் கடைகள் வைத்து ஹேர் ஆயில் விற்பனை செய்கின்றனர். பலரும் இவர்களை தேடி வந்து ஆயில் வாங்கி செல்கின்றனர். இந்த வழியாக சாலைகளில் செல்வோரும் வாங்குவதுண்டு- நமது சிறப்பு நிருபர் - .
2 hour(s) ago | 9
7 hour(s) ago
7 hour(s) ago