உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தசரா யானைகளுக்கு அஞ்சலி

தசரா யானைகளுக்கு அஞ்சலி

மைசூரு: தசரா விழாவில் தொடர்ந்து 18 ஆண்டுகளாக தங்க அம்பாரியை சுமந்த துரோணா மற்றும் மூன்று ஆண்டுகளாக அம்பாரியை சுமந்த ராஜேந்திரா யானைகளை மைசூரு மக்கள் மறப்பதில்லை.மைசூரு தசரா விழா என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது, ஜம்பு சவாரி ஊர்வலம் தான். அதுவும் தங்க அம்பாரியை சுமக்கும் யானை மீது தான் அனைவரது பார்வையும் இருக்கும்.ஜம்பு சவாரி ஊர்வலத்தின் போது, மைசூரு நகரம் முழுதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். கால் வைப்பதற்கும், இடமில்லாமல் நகரமே விழா கோலம் பூண்டிருக்கும்.அந்த வகையில், தொடர்ந்து 18 ஆண்டுகளாக தங்க அம்பாரியை சுமந்த யானை துரோணா, 1998ல் இறந்தது. மூன்று ஆண்டுகளாக அம்பாரியை சுமந்த ராஜேந்திரா கடந்தாண்டு டிசம்பரில் இறந்தது.இந்த இரண்டு யானைகளும். எச்.டி.கோட்டே தாலுகாவின் பெல்லஹாடி கிராமத்தில், அருகருகே புதைக்கப்பட்டன. மாவட்ட நிர்வாகம் சார்பில், சமாதி கட்டி, ஆண்டுதோறும் தசரா விழாவின் போது நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது.நடிகர் புனித் ராஜ்குமார் நடித்த கந்ததகுடி ஆவணப்படத்தில், ராஜேந்திரா இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. மேலும், எட்டு முறை தங்க அம்பாரியை சுமந்த அர்ஜுனா யானை கடந்தாண்டு இறந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை