உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தொகுதி மறுசீரமைப்பு கூட்டு குழு கூட்டம்: மம்தா புறக்கணிப்பு

தொகுதி மறுசீரமைப்பு கூட்டு குழு கூட்டம்: மம்தா புறக்கணிப்பு

கோல்கட்டா: சென்னையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நாளை நடக்கும் கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டத்தை திரிணமுல் காங்கிரஸ் புறக்கணிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக ஆலோசிக்க சென்னையில் நாளை கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் பங்கேற்கும்படி ஏழு மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மன் சென்னை வந்துள்ளனர். கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் நாளை காலை சென்னை வருகிறார். பிஜூ ஜனதா தளம், பாரதிய ராஷ்ட்ரீய சமீதி கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனிடையே, தே.ஜ., கூட்டணியில் உள்ள ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்நிலையில், இக்கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் பங்கேற்காது என தகவல் வெளியாகி உள்ளது. அம்மாநிலத்தில் ஒரே மாதிரியான அடையாள அட்டை பிரச்னை உள்ளது. இது குறித்து மம்தா பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார். இதற்கு தேர்தல் கமிஷன் விளக்கமளித்து வருகிறது. இந்த பிரச்னை பீஹார், கேரளா, தமிழகம், மேற்கு வங்க மாநிலங்களில் நடக்கும் சட்டசபை தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என மம்தா கருதுகிறார். இதனால், தற்போதைய நிலையில், இந்த பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அவர் முடிவெடுத்து உள்ளதாகவும், இதனால் சென்னையில் நாளை நடக்கும் கூட்டத்தில் அவரது கட்சி சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.பீஹார் சட்டசபைக்கு இந்தாண்டு தேர்தல் நடக்க உள்ள நிலையில், தமிழகம், கேரளா, மேற்கு வங்க சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

sankar
மார் 23, 2025 03:12

ஊழல்களை மறைக்க திமுக சிறுபிள்ளைத்தனம்


பேசும் தமிழன்
மார் 22, 2025 09:46

இது தான் எங்கள் விடியல் தலைவருக்கு.... மமதை மேடம் கொடுக்கும் மரியாதையா ???..... அப்போ இண்டி கூட்டணி போல இதுவும் புட்டுகிச்சா..... ஆமாம் அகிலேஷ் யாதவ்..... லாலுபிரசாத் யாதவ்..... உத்தவ் தாக்கரே போன்ற ஆட்களை ஏன் கூப்பிடவில்லை ???


தாமரை மலர்கிறது
மார் 21, 2025 23:02

யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பது போல ஸ்டாலின் மாநாட்டிற்கு வந்தால், பின்னாலேயே ஐடி ரைடும் வரும். ஜாக்கிரதை.


xyzabc
மார் 21, 2025 22:31

Very good suggestion Mr Iyer


Iyer
மார் 21, 2025 22:18

மேற்கு வங்கத்தில் சுமார் 1 கோடி பங்களாதேஷிகள் + ரொஹிங்கியாக்கள் வோட்டர் ID பெற்றுள்ளனர். மேற்கு வங்கத்தில் இப்போதைக்கு தேர்தல் நடத்துவது மடத்தனம் - தற்கொலைக்கு சமம். 5 வருடம் மேற்குவங்கத்தை யூனியன் பிரதேசமாக அறிவித்து சட்டவிரோத பங்களாதேசிகளை அடையாளம் கண்டு அவர்களை நாட்டை விட்டு துரத்தியபின் தான் தேர்தல் நடத்தணும்


xyzabc
மார் 21, 2025 22:34

Very good suggestion sir, regarding west Bengal. Clean up needed in TN also


கண்ணன்,மேலூர்
மார் 21, 2025 22:56

மம்தாவுக்கு தெரியும் தமிழகத்தில் திமுக நடத்தும் தொகுதி மறு சீரமைப்பு கூட்டம் என்பது ஒரு வெட்டிக் கூட்டம் மக்களை ஏமாற்றும் நாடக கூட்டம் என்று அதனால்தான் கூட்டத்தை புறக்கணித்து தமிழக முதல்வர் மூஞ்சியில் கரியை பூசி விட்டார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை