வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கொலை குற்றங்களில் தமிழகம் முதலிடம் என்றால், மேற்குவங்கம் இரண்டாவது இடம். இரண்டு மாநிலங்களிலும் உள்ள முதல்வர்கள் சரியில்லை, காவல்துறையினர் சரியில்லை.
கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரமுகரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இரு தினங்களுக்கு முன்பாக இதே கட்சியைச் சேர்ந்த ரஜக் கான் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.பிர்பூம் மாவட்டத்தைச் சேர்ந்த திரிணமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் பியூஷ் கோஷ் என்பவர் ஸ்ரீநிதிபூர் பகுதி தலைவராக இருந்தார். நேற்றிரவு 2 மணியளவில் தொலைபேசி அழைப்பு வந்ததையடுத்து, வீட்டில் இருந்து வெளியே வந்த அவரை, மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். ஏற்கனவே, திரிணமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் ரஜாக் கான், கடந்த 10ம் தேதி இரவு கட்சியின் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போது, மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நடந்து 2 தினங்களுக்குப் பிறகு, அக்கட்சியின் மற்றொரு தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது திரிணமுல் காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பியூஷ் கோஷ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து துப்ரஜ்பூர் பா.ஜ., எம்.எல்.ஏ., அனுப் ஷா கூறுகையில், 'கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்ற கொலை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. பாமர மக்கள் அல்லது திரிணமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் கொல்லப்படுகின்றனர். இதற்கு மம்தா பானர்ஜியே முழு பொறுப்பாகும். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க இந்த அரசால் முடியவில்லை,' என்றார்.
கொலை குற்றங்களில் தமிழகம் முதலிடம் என்றால், மேற்குவங்கம் இரண்டாவது இடம். இரண்டு மாநிலங்களிலும் உள்ள முதல்வர்கள் சரியில்லை, காவல்துறையினர் சரியில்லை.